லியோவ விடுங்க தளபதி68 அப்டேட் சொல்லுங்க… யுவன் கொளுத்தி விட்ட தீ.. என்ன ஸ்பீடுப்பா!

விஜயின் லியோ படத்தின் அப்டேட்கள் கொஞ்சம் ஓய்ந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பரவி வருகிறது. அந்த வகையில் யுவன் தற்போது தளபதி68 குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அந்த செய்தி தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி68. பெயர் வைக்காத இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க இருக்கிறார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னர் படக்குழு லண்டனில் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : அப்பாவுக்கே இயக்குனராகும் மகன்.. 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி…

இரண்டு விஜய் கதாபாத்திரம் என்பதால் ஒரு விஜயிற்கு சில டெஸ்ட் ஷூட்களும், விஎஃப்எக்ஸ்காக சில ஸ்கேன்களும் நடந்தது. மேலும் பல முக்கிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. ஒரு நாயகி ப்ரியங்கா மோகன் என உறுதியான நிலையில் இரண்டாவது நாயகி இன்னும் டிக் அடிக்கப்படாமலே இருக்கிறது.

முதலில் ஜோதிகாவை புக் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் கால்ஷூட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. அவரை தொடர்ந்து சிம்ரனிடம் பேசி அந்த முடிவும் பின்னர் கைவிடப்பட்டது. தற்போது அந்த லிஸ்ட்டில் டிக் செய்யப்பட இருக்கும் நிலையில் இருப்பவர் நடிகை சினேகா. ஏறத்தாழ அவர் ஓகே ஆகிவிடுவார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க ; குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..

அதை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி நிகழ்வில் அவரிடம் தளபதி68 அப்டேட் கேட்கப்பட்டது. நான் ஒரு பாட்டை இசையமைத்து முடித்துவிட்டேன். அந்த பாட்டு தர லோக்கலாக இருக்கும். அதை தான் முதலில் ஷூட் செய்ய இருக்கிறார்கள் எனக் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே கோலிவுட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தி வரும் அனிருத்திடம் இருந்து தன்னுடைய புகழை மீட்டுக்கொள்ள இந்த படத்தின் பாடல்களை டாப் ஹிட்டாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கி இருக்கிறார் யுவன். இதனால் தளபதி68ன் பாட்டு மாஸாக அமையும் எனக் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story