தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..

by Akhilan |
தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..
X

Thalapathy69: நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி69 திரைப்படத்தின் ஹீரோயினுக்கான தேடல் தொடங்கி விட்டதாம். அதில் முதற்கட்டமாக முன்னாள் ஹிட் நாயகி ஒருவரை மீண்டும் கோலிவுட்டுக்குள் இறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அரசியல் கட்சிக்குள் களம் இறங்க இருக்கிறார் நடிகர் விஜய். அந்த எண்ட்ரிக்கு முன்னர் தளபதி69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் வேட்டை தான் பலமாக இருந்தது. பலர் பட்டியலில் இருந்தனர்.

இதையும் படிங்க: ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் நான்கு திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?

முதலில் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தினை இயக்குவதாக அறிவிப்புகள் கசிந்தது. அடுத்ததாக வெற்றிமாறன் பெயர் அடிப்பட்டது. இதையடுத்து, திரிவிக்ரம், ஆர்.ஜே.பாலாஜி, ஹெச்.வினோத் உள்ளிட்டோர் பெயர்கள் தொடர்ச்சியாக அடிப்பட்டது. ஆனால் விஜய், ஹெச்.வினோத் கதை மீது அதிக ஆர்வம் காட்டினாராம்.

ஏற்கனவே அரசியலுக்கு முன் கடைசி படம் என்பதால் அரசியல் கதை மீது தான் விஜய் அதிக கவனமாக இருந்ததாராம். அதில் கில்லியான ஹெச்.வினோத்தையே விஜய் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து, அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இப்படத்தின் நாயகி வேட்டையில் படக்குழு இறங்கி இருக்கிறது. அதன்படி, படத்தில் நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. ஏற்கனவே சமந்தா விஜயுடன் கடைசியாக மெர்சல் படத்தில் இணைந்து நடித்து ஹிட்டடித்தார்.

இதையும் படிங்க: ரஜினி படம் பார்த்துட்டு அவருக்கிட்டேயே படம் சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… நடந்தது இதுதான்..!

இதை தொடர்ந்து அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பெரிய பின்னடைவை சந்தித்தார். அவரின் மார்க்கெட்டும் சரிந்தது. தற்போது மீண்டும் தளபதி69ல் சமந்தா இணைவதன் மூலம் திரிஷா போன்று இரண்டாவது இன்னிங்ஸில் ஹிட் அடிப்பார் எனக் கூறப்படுகிறது.

Next Story