விஜய் ரசிகர்களுக்கு வருத்தமான செய்திதான்… தளபதி69 ஷூட்டிங் எப்போ தெரியுமா?
விஜயின் சினிமா கேரியரின் கடைசி படமான தளபதி69 படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக இருந்த விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க இருப்பதாக அறிவித்தார். இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய அளவில் வருத்தத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: தனுஷ் நடித்த படம் என் படத்தின் ஸ்கிரிப்ட்தான்! எல்லாத்துக்கும் இவர்தான் இன்ஸ்பிரேஷனா இருப்பார் போல
ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி பெரிய அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களையே குவித்தது. இப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயின் கேரியரின் கடைசிப்படமான தளபதி69 குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு படங்களை இயக்கிய ஹெச்.வினோத் தான் இப்படத்தினை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் விஜயுடன் மமிதா பைஜு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல் சார்ந்த கதைக்களமாக தளபதி69 இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: நீங்க வருவீங்க… யார் உங்களுக்கு ஓட்டு போடுறது… விஜய் நடிகையின் அரசியல் ஆசை!
தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கை அக்டோபரில் தொடங்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இதன் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களுக்கு கவலையாகவே இருக்கும் எனவும் பேச்சுகள் அடிப்படுகிறது.