அப்படிப்போடு… சூப்பர்வில்லனை களமிறக்கிய தளபதி69 டீம்… மாஸா இருக்குமே!
Thalapathy69: விஜயின் சினிமா கேரியரில் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசி படமாக உருவாகும் தளபதி69ல் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் தன்னுடைய கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவருடைய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வெளியானது. படம் வசூலில் களைக்கட்டியது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையும் குவித்தது.
இதையும் படிங்க: மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!
இப்படத்தில் விஜயிடன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜைகள் அக்டோபரில் தொடங்கி அதன்பின்னர் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இப்படத்தில் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் கில்லி, வில்லு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். கண்டிப்பாக ரசிகர்களிடம் இக்கூட்டணி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விக்ரமுடன் பல கெட்டப்புகளில் நடித்த சசிக்குமார்!.. அட யாருக்கும் தெரியாம போச்சே!…
இப்படத்தில் ஐந்தாவது முறையாக விஜய்யிற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே கோட் திரைப்படத்தில் யுவனின் பாடல்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளுக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு விஜய் நடிக்க வேண்டிய கதையில் தான் தற்போது தன்னுடைய 69 ஆவது படமாக நடிக்கிறார். அப்போது ஹெச் வினோத் சொன்ன சொன்ன கதையை மறுத்தார் தளபதி. பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் தலைவன் வருகிறான் என்ற பெயரில் உருவாக இருந்தது. ஆனால் கமலின் பிஸியால் மீண்டும் இப்படம் தளபதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.