தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி69 படத்தின் டைட்டில் மற்றும் கதை இதுவாக தான் இருக்கும் என சில அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
தளபதி விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் கடைசியில் இருக்கிறார். கோட் திரைப்படம் முடிந்த கையோடு தளபதி69 படத்தினை அறிவித்துவிட்டார். ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். வில்லனாக பாபி தியோல், ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் நல்லவரு தா… ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல… இது உலக மகா நடிப்பா இருக்கே…!
விஜயின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளனர். இது அரசியல் படமாக இருக்கலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அனைவரும் கொண்டாடும் விதமாக இப்படம் அமையும் என வினோத்தே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் தலைவன் இருக்கிறான் என அமையலாம் எனக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்க வேண்டிய இத்திரைப்படத்தில் தான் தற்போது தளபதி நடிக்க இருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தலைவா படத்தில் டேக்லைன் பிரச்னையால் விஜய் ரொம்பவே பாதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இவருக்கு இல்லப்பா எண்ட்! பொன்விழா ஆண்டில் டபுள் ட்ரீட் கொடுக்க தயாரான ரஜினி
தொடர்ந்து அப்படத்தை வெளியிட விடாமல் பிரச்னை வெடித்தது. விஜயே மன்னிப்பு வீடியோவாக வெளியிட்டு டேக் லைன் நீக்கப்பட்ட பின்னர் படம் வெளியானது. இருந்தும் சில மணி நேரங்களில் படம் திருட்டு விசிடிகளானது. இந்நிலையில் கடைசி திரைப்படத்தில் இப்படம் ஒரு டைட்டிலுடன் வெளிவந்தால் என்னென்ன பிரச்னையை சந்திக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.