More
Categories: Cinema News latest news

தளபதி69 இல்லங்க… தளபதி70 தான் விஜயின் கடைசி படம்… கசிந்த மாஸ் அப்டேட்.. போட்றா வெடிய…

Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி படமாக 69 இருக்காது என்ற சந்தோஷமான தகவல்கள் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். அதுகுறித்த சில அப்டேட்களும் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருகிறது.

அரசியல் கட்சியை விஜய் அறிவித்த அறிக்கையில் தான் எடுத்துக்கொண்ட படங்களை முடித்துக்கொண்டு மொத்தமாக அரசியல் பணிக்கு அர்ப்பணிப்பாக வேலை செய்வேன் எனக் கூறி இருப்பார். ஆனால் அதில் என்னென்ன படங்கள் என்ற எந்த தகவலும் கூறிப்பிடவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: கல்யாணத்துக்கே கூப்பிடல!. ஆனா விஜயகாந்த் செய்த உதவி!.. நெகிழும் ஆர்.வி.உதயகுமார்…

இதனால் நடித்துக்கொண்டு இருக்கும் கோட் திரைப்படத்துடன், தளபதி69ல் நடிப்பார் என்று தகவல்கள் கிசுகிசுத்தது. அந்த வகையில் விஜயின் கடைசி படத்தினை இயக்க போவது யார் என்ற தகவல்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி கொண்டும் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜில் தொடங்கி த்ரி விக்ரம் வரை பட்டியல் நீண்டு இருக்கிறது.

கடைசி படத்துக்கு விஜயிற்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. முழு நீள அரசியல் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்த படம் 2026 தேர்தலுக்கு முன்னரே ரிலீஸ் ஆகும் என்றனர். இந்நிலையில் விஜய் தளபதி70ல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதையும் படிங்க: பிரச்னை உங்களை தேட வரலை பாக்கியா… நீங்களே தான் போய் சிக்கிடுறீங்க… மீண்டும் மீண்டுமா?

இப்படமும் அரசியல் சார்ந்தே உருவாக வேண்டும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்து இருக்காராம். ஒருவேளை 69வது படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் 70வது திரைப்படம் 2027ம் ஆண்டு ரிலீஸ் என்றும் ஒரு தகவல்கள் இருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பு, இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி வரலாம் எனவும் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு படங்கள் தான் எனக் கூறப்பட்ட நிலையில் மூன்றாகி இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செந்திலுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி.. அதன் சுவாரஸ்ய பின்னணி இதோ

Published by
Akhilan

Recent Posts