Connect with us

Cinema News

விஜயின் 71வது பட இயக்குனர் இவரா… அட இந்த படத்திலையே Hint கொடுத்து இருக்காரா?

Thalapathy71: விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து அவரின் அடுத்த பட அறிவிப்புகள் வரிசைக்கட்டி வரும் நிலையில் தற்போது ஒரு ஆச்சரிய தகவலும் இணையத்தில் லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

லியோ படத்தினை விஜய் அதிகம் எதிர்பார்க்க படம் மிகப்பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது. இதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படம் வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: நான் பண்ண தப்பு! அத சரி செய்யத்தான் ‘வாலி’ படத்துல நடிச்சேன் – என்ன சொல்றீங்க ஜோதிகா?

படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தினை அடுத்த தமிழ் புத்தாண்டு தினத்தில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இப்படத்துக்கு கோட் என பெயர் வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதன் அறிவிப்பு நியூ இயர் தினத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் தொடர்ந்து விஜயின் இயக்குனர் யாராக இருக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், அடுத்த 2 வருடத்துக்கு விஜய் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற தகவலே அவர் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வருகிறது. மேலும் 2026 தேர்தல் முடிந்த பின்னரே அவர் படத்தில் நடிக்கலாம். அதுவும் விஜய் கையில் தான் இருக்கிறது.

இதையும் படிங்க: உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..

மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தளபதி67க்கு ஹிண்ட் கொடுத்து இருப்பார். அதுப்போல லியோ படத்தின் கார் நம்பர் 71 என இருக்கும் இதனை வைத்து தான் இந்த தகவல் இணையத்தில் வட்டமடிக்கிறது. ஆனால் இப்படி உருவானால் கூட அதுக்கு 4 வருடம் கூட எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top