இப்ப எனக்கு தான் பிரச்சனை... வாரிசு குழுவுடன் சண்டைக்கு சென்ற இசையமைப்பாளர் தமன்...
வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் போஸ்ட்டிற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் வந்திருக்கிறது. ஆனால் அவர் அதில் புலம்பியதை தான் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அப்படி என்ன விஷயம் எனக் கேட்குறீங்களா? வாங்க சொல்றோம்.
விஜயின் வாரிசு திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த எதிர்பார்ப்பு உள்ளது. தமன் முதன்முறையாக விஜயிற்கு வாரிசு படத்தில் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் சிங்கள் ரஞ்சிதமே ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கி இருக்கிறது. அப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார். இதனால் அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் ஜானி வாரிசு படத்தின் பாடல்களுக்கு நடனம் இயக்கி இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் மற்றும் வம்சியின் வாரிசு படத்துக்கு இன்னொரு பீட் சாங் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் பெல்லாரியில் படமாக்கி இருக்கும் இந்த பாடல் சூப்பராக அமைந்துள்ளது. உங்களின் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அந்த ட்வீட்டை டேக் செய்த தமன் இப்போ எனக்கு தான் ப்ரஷர் அதிகம் என விளையாட்டாக கமெண்ட் செய்து இருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் நாங்களும் அதுக்கு தான் வெயிட் செய்கிறோம் எனக் கூறிவருகின்றனர். அட அவர் ப்ரஷர் ஆக இல்லையாம். ஜானி சொன்ன அந்த பாட்டை கேட்க தானாம்.
வம்சி இயக்கி வரும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் ராஷ்மிகா விஜயிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜயிற்கு வில்லனாக சில முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். அதுவுமில்லாமல், பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு படத்துடன் மோத இருப்பதால் மேலும் இப்படத்தினை வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்றே விஜய் விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.