அடிச்சி தூக்கிய தங்கலான்!.. முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!...
Thangalaan: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் தங்கலான். பல வருடங்களுக்கு முன்பு கோலார் தங்க வயலில் வேலை செய்து வந்த தமிழர்கள் பற்றிய கதை இது. பிரசாந்த் நீல் கற்பனை செய்த கேஜிஎப் முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே.
ஆனால், விக்ரம் நடித்து வெளியாகியுள்ள தங்கலான் உண்மைக்கு மிகவும் நெருக்கமான படமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். இந்த படத்தில் ஒரு குழுவின் தலைவன் தங்கலனாக விக்ரம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தங்கலானாகவே வாழ்ந்திருக்கிறார் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் விக்ரமின் நடிப்பை சிலாகித்து பேசி வருகின்றனர். மேலும், ரஞ்சித்தின் இயக்கமும், ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்த படம் சுதந்திர தினமான நேற்று வெளியானது.
ஏற்கனவே விக்ரம் பிதாமகன், ஐ போன்ற படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் தங்கலான் படத்திற்காக அதிக உழைப்பு கொடுத்திருக்கிறார். தங்கலானோடு பிதாமகன், ஐ படங்களை ஒப்பிட்டால் 8 சதவீதம் கூட கிடையாது என சியான் விக்ரமே பல மேடைகளிலும் சொன்னார்.
இந்நிலையில், முதல் நாள் வசூலாக தங்கலான் திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கேரளாவில் விக்ரமுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. எனவே, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என 3ம் சேர்த்து இப்படம் அங்கு 3 கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம்.
விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் குறைவுதான் என்றாலும் வார இறுதி நாட்கள் தொடார்ந்து வருவதால் தங்கலான் படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.