கலெக்ஷனில் தாறுமாறு காட்டும் தங்கலான்!.. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?...
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தங்கலான். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்பு வட ஆற்காடு, சேலம், தர்மபுரி பகுதியில் வசித்த மக்கள் தங்க வயலில் வேலை செய்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.
அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை அப்போது இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள் சிலர் எப்படி தங்க சுரத்தில் பயன்படுத்தினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படத்தில் தங்கலானாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். அவரின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி என பலரும் நடித்திருக்கிறர்கள். நடித்தார்கள் என சொல்வதை விட எல்லாருமே அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக படம் பார்த்த பலரும் சொல்லி வருகிறார்கள். அதேநேரம், படத்தின் பல காட்சிகளிலும் விக்ரம் பேசும் வசனங்கள் புரியவில்லை என்கிற விமர்சனமும் இப்படத்தின் மீது இருக்கிறது.
இந்த படம் ஃப்ர்ஸ்ட் காப்பி அடிப்பையில் உருவாக்கப்பட்டது. சொன்ன பட்ஜெட்டை விட 10 கோடிக்கும் மேல் அதிகமாகிவிட அந்த பணத்தை பா.ரஞ்சித் செலவு செய்தார். ஆனால், அதை தரமுடியாது என ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா சொல்ல சில மாதங்கள் பஞ்சாயத்து நடந்தது.
அதன்பின்னரே பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டு தங்கலான் படம் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியான நிலையில் 2 நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 53.64 கோடி வசூல் செய்திருப்பதாக பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடெக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: கேப்டன் விஷயத்தில் விஜய் சொன்னது இதுதான்! ‘கோட்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்