தங்கலான் கதை உருவானதன் சுவாரஸ்ய பின்னணி.. இந்த படத்தோடு மோதும் மற்றுமொரு பிரம்மாண்டம்!..

2024ம் ஆண்டின் டான் படங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ள படம் தங்கலான். ச்சீயான் விக்ரம் இந்தப் படத்திற்காக தன் உடலை ரொம்பவே வருத்தியுள்ளார் என்பது தெரிந்த விஷயம். படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வந்ததில் இருந்தே பாலிவுட்டிலும் தங்கலான் பற்றிய பேச்சு தானாம். இந்தப் படத்தோட கதை கேஜிஎப்பை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாம். கோலார் தங்க வயல்களின் உண்மைக் கதை என்றும் சொல்லப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோலார் தங்கச்சுரங்கம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது […]

By :  sankaran v
Update: 2024-02-16 04:57 GMT

Thangalan

2024ம் ஆண்டின் டான் படங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ள படம் தங்கலான். ச்சீயான் விக்ரம் இந்தப் படத்திற்காக தன் உடலை ரொம்பவே வருத்தியுள்ளார் என்பது தெரிந்த விஷயம். படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வந்ததில் இருந்தே பாலிவுட்டிலும் தங்கலான் பற்றிய பேச்சு தானாம்.

இந்தப் படத்தோட கதை கேஜிஎப்பை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாம். கோலார் தங்க வயல்களின் உண்மைக் கதை என்றும் சொல்லப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோலார் தங்கச்சுரங்கம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது அவர்களால் சுரண்டி கொள்ளையடிக்கப்பட்டது.

ஆனால் தங்கலான் படத்தின் கதை களம் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அப்போது அங்கு வேலை செய்த சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சுற்றிலும் நடக்கும் உண்மை சம்பவங்கள் தான் படத்தின் கதை.

Gangwa

இது இந்த ஆண்டின் பொங்கலுக்கே ரிலீஸாகி விடும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. இப்போது தயாரிப்பாளர்கள் ஏப்ரல் மாதம் வருவதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் டீஸரில் ரத்தக் கொதிப்பை உண்டாக்கும் காட்சிகளும், அங்குள்ள கிராமத்து மக்களின் தோற்றமும் காட்டப்படுகிறது. மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பேசப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் செட்டிங். காண்போரை அதிசயிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். தங்கலான் படத்தை பா.ரஞ்சித் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கலான் தயாரித்து வரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அடுத்த மாபெரும் படைப்பாக சூர்யா நடித்து வரும் கங்குவாவையும் வெளியிட தயாராகி வருகிறது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்தப்படமும் வரும் ஏப்ரல் மாதமே வெளிவர உள்ளதாம். கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெண்டு படத்தையும் ஒரே நிறுவனம் தயாரித்து இருப்பதால் இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் பார்க்கும் போது சூர்யா, விக்ரம் இருவருமே நடிப்பு என்று வந்து விட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கிடுவார்கள். இருவரும் இணைந்து நடித்த பிதாமகன் படமே அதற்கு சாட்சி.

Tags:    

Similar News