நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தின் வெற்றி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, பாலுமகேந்திரா இயக்கி வண்ண வண்ண பூக்கள் என பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார்.
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் இருந்தார்கள். நன்றாக நடனம் ஆடுவார், சண்டை போடுவார், நன்றாக நடிப்பார், கராத்தே, ஜிம்னாஸ்டிக் தெரிந்தவர் என இவருக்கு பல திறமைகள் உண்டு. 90களில் முன்னணி நடிகராக இருந்தார்.
இதையும் படிங்க: பகத் பாசில் வீட்ல பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கும்!.. நஸ்ரியா கொடுத்த அதிர்ச்சி பேட்டி!..
ஆனால், இவருக்கு பின்னால் சினிமாவுக்கு வந்த விஜய், அஜித்தெல்லாம் உச்சம் தொட்டுவிட்ட பிரசாந்தோ காணாமல் போனார். அவரின் சொந்த வாழ்வில் சந்தித்த பிரச்சனை அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மனைவியை பிரிந்தபின் அவரின் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை.
அந்தகன் என்கிற படத்தில் நடித்து முடித்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இப்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் விஜயின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். விசில் போடு பாடலில் பிரசாந்த் ஆடிய நடனம் பலரையும் கவர்ந்திருக்கிறது.
இதையும் படிங்க: என் பாட்டை நானே கேட்க மாட்டேன்… எவர்கிரீன் ஹிட் கொடுத்த மோகனா இப்படி சொல்றாரு?
கோட் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பிரசாந்த் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குனரும், பிரசாந்த் நடித்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நட்பையும், காதலையும் மிகவும் கண்ணியமாக சொன்ன படம் அது. பிரசாந்த் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். என்ன சொன்னாலும் செய்வார். அற்புதமான நடிகர். பெரிய இடத்தில் இருந்திருக்க வேண்டிய நடிகர் அவர். மிஸ் ஆகிவிட்டது. காணாமல் போய்விட்டார்.

அந்த படத்தில் எடுத்த சில காட்சிகளை அவரின் அப்பா தியாகராஜன் பார்த்துவிட்டு ‘என் மகனை இவ்வளவு அழகாக காட்டி இருக்கிறீர்கள். என் மகனா என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’ என என்னை பாராட்டிவிட்டு எனக்கொரு வாட்ச் ஒன்றை பரிசளித்தார். அந்த வாட்ச் இன்னமும் என்னிடம் இருக்கிறது’ என அவர் பேசி இருந்தார்.
