கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ள தங்கர் பச்சான் சமீபத்தில் நடைபெற்ற அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது 500 கோடி வசூல் செய்தால் அது நல்ல படமா என பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தான் 500 கோடி வசூல் செய்த நிலையில், அந்த படத்தை தாக்கி தான் தங்கர் பச்சான் பேசியுள்ளார் என அந்த வீடியோவை ரஜினிகாந்த் ஹேட்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!
பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தங்கர் பச்சான் நாங்க எல்லாம் ஒரு படத்தை எடுக்கவே யோசிச்சு, யோசிச்சு இளைஞர்களையும் சமூகத்தையும் அந்த படத்தில் உள்ள எந்த விஷயமும் கெடுத்து விடக் கூடாது என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால், இப்போ வரவங்களாம் படம் எடுக்கிறேன்னு என்கிற பெயரில், ஒரு 1000 துப்பாக்கியை வாடகைக்கு எடுத்துக்கிட்டு, படம் முழுக்க பலரையும் குருவி சுடுற மாதிரி சுட்டா அது சூப்பர் படமா? ஒரு உயிரோட மதிப்பு தெரியுமா? அவங்களுக்கு.. வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு ஆயுத கலாச்சாரத்தையும் சுருட்டு பிடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு பேரு என்ன தெரியுமா? என விளாசி உள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..
தீபாவளிக்கு சரக்கு விற்பனை அமோகம் என்பது போல இருக்கு, உங்கள் படம் 500 கோடி வசூல் என்கிற அறிவிப்பு என ரஜினிகாந்தின் ஜெயிலரை துவைத்து தொங்கப்போட்டு அடித்து விட்டார். எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்தவன் தான் நான், அவர் திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, தப்பு செஞ்சாலும் மன்னிச்சு விட்றுனும், உழைச்சி சாப்பிடணும், அப்பா அம்மாவை மதிக்கணும், இப்படி ஒவ்வொரு படத்திலும் நல்ல கருத்துக்களை சொல்லியே நடித்து வந்தார்.
ஆனால், இப்போதைக்கு முன்னணி நடிகர்கள் என சொல்லிக் கொண்டு திரியும் ஒருத்தருக்காவது சமூக அக்கறை இருக்கா என ரஜினியை மட்டுமின்றி விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களையும் வச்சு விளாசி உள்ளார்.
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…