தம்பிக்காக ஹாலிவுட் தரத்தில் அதகளம் செய்யும் மோகன்ராஜா! ‘தனி ஒருவன் 2’க்காக இப்படி ஒரு புரோமோவா?

by Rohini |
ravi
X

ravi

தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் கெரியரில் இவரது சகோதரர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஜெயம் ரவியை வைத்து எடுத்த முதல் படமே மாபெரும் ஹிட் அடித்ததால் இன்று வரை மக்கள் ஜெயம் ரவியை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் மோகன் ராஜா.

அந்த வகையில் அவரது அண்ணனை மறக்காமல் மிகவும் பெருமையாக பேசுவார் ஜெயம் ரவி. இந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ஒரு மாஸ் ஹிட்டை கொடுத்தார் மோகன் ராஜா. தனி ஒருவன் என்ற படத்தை எடுத்ததன் மூலம் மக்களிடையே ஒரு தனி இடம் பிடித்தார்.

இதையும் படிங்க : கஷ்டப்பட்டு பாடினேன்!.. இப்படியா எடுப்பீங்க?!… எஸ்.பி.பி குறை சொன்ன ஒரே பாடல் அதுதான்!..

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஒரு நீண்ட இடைவேளிக்கு பிறகு அரவிந்த்சாமி இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது ரசிகர்கள் மோகன் ராஜாவிடமும் ஜெயம் ரவியிடமும் கேட்டு வந்த நிலையில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார் மோகன் ராஜா.

அதன் விளைவுதான் இன்று தனி ஒருவன் 2 படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாக உள்ளதாம். இந்தப் படத்திற்கான அறிவிப்பை ஒரு புரோமோ வீடியோ மூலம் அறிவிக்க உள்ளார்களாம். டி. நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் தான் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்களாம்.

இதையும் படிங்க : பலே ஆளு சார் நீங்க… இருவர் படத்துக்கு ஐஸ் கால்ஷூட்டுக்கு அலட்டிக்காத மணிரத்னம்…

கூடவே தனி ஒருவன் முதல் பாகத்தையும் ரசிகர்களுக்காக திரையில் வெளியிட இருக்கிறார்களாம். இந்த இரண்டாம் பாகத்திற்கான புரோமோ வீடியோவை ஏ.எல்.விஜய்தான் இயக்கியிருக்கிறாராம். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவெனில் இந்த புரோமோ வீடியோவே ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

தனி ஒருவன் - 1 மற்றும் 2 இவற்றை ரசிகர்களுடன் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கண்டுகளிக்க உள்ளார்களாம். இந்த நிலையில் புரோமோ ஹாலிவுட் தரத்தில் வருவது சரி ஆனால் அதை இயக்கியது ஏ.எல்.விஜய் என்று சொல்லும் போதுதான் பகீர் கிளப்புகிறது என ரசிகர்கள் தன் கமெண்ட்கள் மூலம் சொல்லி வருகிறார்கள்.

Next Story