நன்றி மறக்காத நல்ல மனிதன் விஜய் சேதுபதி.! நெகிழ்ந்துபோன தயாரிப்பாளர்.!
தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தேடப்பட்டு வரும் முக்கிய நடிகராக மாறி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் மொழியைத் தாண்டி ஹிந்தி தெலுங்கு என தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி விட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றது.
இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த திரைப்படம் 96. பிரேம்குமார் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார் இத்திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால், இத்திரைப்படம் ரிலீசாகும் நாளுக்கு முன்னாள் வரை இந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என கேள்வி இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை அந்த நேரத்தில் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை விட அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டு படத்தை நல்ல வெற்றிப் படமாக மாற்றினார். அதன் பிறகு அதை லலித் குமார் தயாரிப்பில் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
இதையும் படியுங்களேன் … நயன்தாரா சொன்னதை நிறைவேற்றிய தளபதி விஜய்.! இது என்ன புது கதையா இருக்கே.!?
அதன்பிறகு காத்துவாக்குல 2 காதல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மீண்டும் லலித் குமார் தயாரிப்பு விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம் அந்த படத்தை சமுத்திரகனி நடித்த ரைட்டர் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளாராம் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது
தனது ஒரு படத்தின் ரிலீஸுக்கு உதவி செய்த காரணத்தினால் தொடர்ந்து அந்த தயாரிப்பாளருக்கு முன்னுரிமை கொடுத்து அவரது படத்தின் தொடர்ந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி இது அவரின் நன்றி மறவாத குணத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது