எங்கிட்ட வாங்க!...20 கோடி சேர்த்து தரேன்...விஜய்க்கு வலை விரித்த தயாரிப்பாளர்...

விஜய் தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய்க்கு 66வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு பின் மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கை கோர்க்கவுள்ளாராம். இது விஜயின் 67வது திரைப்படமாகும். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், மாஸ்டர் படம் தயாராகி கொரோனா ஊரடங்கால் 6 மாதங்கள் காத்திருந்து, ஓடிடியில் நல்ல விலைக்கு வந்தும், விஜய் கூறிய ஒரே காரணத்திற்காக தியேட்டரில் இப்படத்தை ரிலீஸ் செய்தார் லலித்குமார்.
அந்த வகையில் அவருக்கு சில கோடிகள் நஷ்டம். எனவே, தனக்கு மீண்டும் விஜய் கால்ஷிட் கொடுக்க வேண்டும் என விரும்புகிறாராம். அதேநேரம், விஜயின் சம்பளத்தில் ரூ.20 கோடி குறைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால், இடையில் புகுந்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘தம்பி நீங்க எனக்கு கால்ஷீட் கொடுங்க. உங்க சம்பளத்துல 20 கோடி சேர்த்து 100 கோடியா கொடுக்கிறேன்’ என விஜய்க்கு ஆசை காட்டியுள்ளாராம். எனவே, விஜய் லலித்குமாரை கழட்டிவிட்டு தாணு பக்கம் விஜய் செல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
விஜய் - முருகதாஸ் இணைந்து உருவான துப்பாக்கி படத்தை தாணுதான் தயாரித்திருந்தார். அதன்பின் இருவருக்கும் ஏதோ காரணத்திற்காக விஜய்க்கும், தாணுவுக்கும் உரசல் எழுந்து அப்படத்திற்கு பின் விஜய் தாணுவுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.