சொன்ன கதை ஒன்னு..எடுத்தது ஒன்னு!.. தயாரிப்பாளர் தாணுவுக்கே தண்ணி காட்டிய கமல்…

by சிவா |   ( Updated:2023-04-21 11:25:39  )
thanu
X

thanu

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக வலம் வருபவர் கமல்ஹாசன். ஐந்து வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். சிறுவனாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்தவர் இவர். தமிழ் சினிமாவின் திறமையான நடிகராகவும், இயக்குனராகவும் பார்க்கப்படுகிறார்.

ரசிகர்கள் இவரை உலக நாயகன் என அழைக்கின்றனர். பல வருடங்களுக்கு பின் விக்ரம் படம் மூலம் தான் யார் என நிரூபித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ரஜினியின் திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் பெரிய ஹிட் படத்தை கொடுத்து ரஜினிக்கு மட்டும்மல்ல. விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கும் டஃப் கொடுத்துள்ளார். இவரின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆளவந்தான். கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. பல புதிய தொழில்நுட்பங்களை கமல் இந்த படத்தில் அறிமுகம் செய்திருந்தார். ஆனால், படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவராமல் போனதால் இந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ‘என்னை கமல் காலி செய்துவிட்டார்… ஆளவந்தான் என்னை அழிக்கவந்தான்’ என தாணு அப்போது பேட்டியே கொடுத்தார். அதன்பின் தாணு தயாரிப்பில் கமல் நடிக்கவே இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தாணு ‘ நானும் கமலும் இணைந்து ஒரு படம் செய்வது என உறுதியானதும் என்னிடம் ‘நளதமயந்தி’ பட கதையை சொன்னார். எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பின் பம்மல் கே சம்பந்தம் பட கதையை சொன்னார். எனக்கு அது பிடித்திருந்ததால் இதையே செய்வோம் என சொன்னேன்.

ஆனால், படப்பிடிப்புக்கு சென்று பார்த்தால், கமல் வேறு கதையை படமாக்கி கொண்டிருந்தார். சரி கமலுடன் வேலை செய்வது ஒரு சுகமான அனுபம் என நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். அந்த படத்தால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பின் 5 படங்களை தயாரித்து அதில் வந்த லாபத்தின் மூலம் அந்த கடனை அடைத்தேன்’ என தாணு கூறியுள்ளார்.

Next Story