திருவிளையாடல் படத்தில் தருமி காட்சி எப்படி உருவானது தெரியுமா? சுவாரசிய பின்னணி..
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த பக்திப்படம் திருவிளையாடல். படத்தில் தருமியாக நடித்த நாகேஷை யாராலும் மறக்க முடியாது. எவ்ளோ உணர்ச்சி பாவங்களை அந்தக் காட்சியில் தன் முகத்திலும் உடல் அசைவிலும் காட்டுவார். அந்தக் காட்சி நம்மை எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதோடு மட்டும் அல்லாமல் திக்குமுக்காடச் செய்து விடும்.
அவ்ளோ நடிப்புக்கும் யார் இன்ஸ்பிரேஷன் என்றால் அது அங்குள்ள ஒரு கிருஷ்ணசாமி என்ற அய்யர் தானாம். அவர் தான் மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு தனக்குத் தானே புலம்புவாராம்.
இதையும் படிங்க... இப்போ விஜயகாந்த்..? கமல் தப்பினார்.. அடுத்த குறி உங்களுக்கா..? உதயநிதியிடம் பகீர் கிளப்பும் பிரபல இயக்குனர்..!
இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிகளை நாகேஷிடம் சின்ன கோடிட்டு தான் காட்டினார். ஆனால் அவரோ ரோடே போட்டு விட்டாராம். சிவாஜி, தருமியான நாகேஷிடம் கேள்விகளைக் கேட்கும் போது ஆரம்பிக்கும் அந்த அதகளம் காட்சி முடியும் வரையிலும் அல்லோகலப்படும்.
கேள்விகளைக் கேட்கும்போது பின்னோக்கியே சாய்ந்து கொண்டு நடக்கும் அந்த பாடி லாங்குவேஜ் நாகேஷ் தவிர வேறு யாருக்கும் வராது. அதே போல எவ்வளவுக்கு எவ்வளவு என் பாட்டில் குற்றம் உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு சன்மானத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று நக்கீரரிடம் நாகேஷ் கெஞ்சலாக கேட்கும்போதும் நம்மை ரொம்பவே ரசிக்க வைத்துவிடுவார்.
இதையும் படிங்க... நீ எதுக்கு பைக்ல வரேனு 3 காரை அனுப்புனாரு – கேப்டன் குறித்து கண்ணீர் மல்க கூறிய இயக்குனர்
நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் வல்லமை படைத்தவர். இன்றைய காமெடி நடிகர்கள் குறித்து அப்போது அவரிடம் கருத்து கேட்டார்களாம். அதற்கு அவர் நச்சென்று பதில் சொன்னாராம். சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லாருக்கு. சிலருக்கு டைம் நல்லாருக்கு... இது எப்படி இருக்கு?
அதே போல வாழ்க்கையில் ரொம்ப எளிமையான மனிதர். எவ்வளவு பணம் இருந்தாலும் வயிறு ஒண்ணு தானே இருக்கு? அப்படின்னு சொல்வாராம். அதே போல அவரைப் பற்றி யாராவது பெருமையாக சொன்னால் அது அவருக்குப் பிடிக்காதாம்.