எஸ்கே.வுக்கு சம்பளம் கொடுத்தவன் நான்… எங்கிட்டேவா…? ஃபீலிங்கான நடிகர் பதிலடி

sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் படமான கோட்டில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். அப்போது விஜய் அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்ததும் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் சிவகார்த்திகேயன் ஒரு சந்தர்ப்பவாதி என வலைப்பேச்சு பிஸ்மி பேசியிருந்தார்.
அதாவது சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் விஜய் கடைசியாக நடித்து வரும் ஜனநாயகன் படமும் வரும் பொங்கலுக்கு மோத உள்ளது. பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவதாக உள்ளது. இதன் பின் அரசியலும் ஒரு காரணம். விஜய் கடைசியாக நடித்த படம் தனியாக வந்தால் பெரிய அளவில் மாஸ் காட்டும். அதனால் பராசக்தியையும் களமிறக்க முடிவு செய்தது ரெட் ஜெயண்ட்.
அந்தப் படத்தில் இந்தி எதிர்ப்பு பின்னணியும் கதைகளமாக உள்ளதால் அவர்களுக்கு அரசியல் பிரசார படமாகவும் அமைய வாய்ப்புள்ளது. இந்தநிலையில் விஜய் தனக்கு துப்பாக்கிக் கொடுத்தாரு என்ற காரணத்திற்காகவாவது எஸ்.கே. என்னை வைத்து அரசியல் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சந்தர்ப்பவாதி.
விஜய் படத்தை நாம தோற்கடிக்கணும்கற ஆசையில களம் இறங்குவதற்கு ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டார் என்றும் சொல்லி இருக்கிறார் பிஸ்மி. அதே நேரம் எஸ்கே.வைப் பற்றி இப்படி சொல்லும்போது பிரபல நடிகர் பிளாக் பாண்டியும் இப்போது ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுவும் நெகடிவிடியாகத்தான் உள்ளது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் பிளாக் பாண்டி ஒரு பேட்டி கொடுத்தார். அதில் சிவகார்த்திகேயன் கிட்ட இருந்த நட்பால, அம்மாவும் நானும் அவரை நேர்ல சந்திச்சி பேசலாம்னு போனதாக சொன்னார். அப்போது எஸ்.கே.வின் மானேஜர் வந்து அவரிடம் 20 ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததாகவும் அதற்கு அதை வாங்க மறுத்துவிட்;டதாகவும் சொன்னார்.
பணத்துக்காக வரல. நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்கன்னு கேட்கவே வந்ததாகவும் மானேஜரிடம் பிளாக்பாண்டியின் அம்மா சொல்லி விட்டாராம். அதன்பிறகு சிவகார்த்திகேயன் பேசவே இல்லை என்றும் சொன்னார். அதன் தொடர்ச்சியாக தற்போதும் ஒரு தகவலை பிளாக் பாண்டி பதிவு செய்துள்ளார்.
நானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து பல நிகழ்ச்சி பண்ணி இருக்கோம். அப்போ நான் ஈவன்ட் பண்ணிட்டு இருந்தேன். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில நான் நடத்துன ஈவன்ட்ல அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் ஷோ பண்ணினாங்க. ரெண்டு பேருக்கும் நான் சம்பளம் கொடுத்து இருக்கேன் என்றார் நடிகர் பிளாக் பாண்டி.
அங்காடித் தெரு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர்தான் பிளாக் பாண்டி. இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பின் மூலமாக வாரம் தோறும் 250 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறாராம். இதற்கு சமுத்திரக்கனியும் உறுதுணையாக இருக்கிறாராம்.