ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட் கார்ட் நடிகரை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!

by Akhilan |
ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட் கார்ட் நடிகரை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!
X

Red card: தமிழ் சினிமாவில் டாப் நாயகர்களாக வலம் வந்த சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு தற்போது ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மற்ற மூன்று நடிகர்கள் மீது பெருவாரியான குற்றங்கள் வெளியில் தெரிந்தது.

அதர்வா ஒருவேளையில் தெரியாமல் சிக்கிவிட்டாரோ என நினைத்த நிலையில் அவர் செய்த பிரச்னைகள் மற்ற நடிகர்களை விட அதிகம் என்றே கூறப்படுகிறது. பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான அதர்வாவை சினிமாவில் சேர்த்து விட்டோம் என்ற ரீதியில் முரளி கண் மூடினார்.

இதையும் படிங்க: முதல் பாதி மரண மொக்கை!.. எஸ்.ஜே. சூர்யா இல்லைன்னா சேகரு செத்துருப்பான்.. மார்க் ஆண்டனி எப்படி இருக்கு?

ஆனால் முதல் படத்தின் ஹிட்டை தவிர அதர்வா சொல்லிக்கொள்ளும்படி இந்த படத்தினையும் ஹிட்டாக கொடுக்கவே இல்லை. தொடர்ச்சியாக நடித்த எல்லா படங்களுமே மண்ணை கவ்வியது. ஆனால் அதர்வாவை நம்பி தொடர்ச்சியாக பலர் கதை சொல்ல வரிசையில் நிற்கின்றனர்.

இந்நிலையில் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கி விட்டு கால்ஷீட் கொடுக்காமல் கல்தா கொடுத்துக்கொண்டே வந்தார். இன்னும் சிலரோ அவர் எந்த இயக்குனரிடம் தெளிவாக கதை கேட்கவே மாட்டாராம். அட்வான்ஸ் கொடுத்தால் உடனே வாங்கி போட்டுகொள்வாராம்.

அப்படி வாங்கினால் கூட ஒழுங்காக ஷூட்டிங் வரவும் மாட்டாராம். இப்படி பல சேட்டைகள் செய்த நிலையில் இந்த பிரச்னையை சங்கத்துக்கு கொண்டு வந்தவர். செம போத ஆகாதே தயாரிப்பாளர் தானாம். அவர் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த லிஸ்ட்டில் அதர்வா பெயர் இடம்பெற்று ரெட் கார்ட் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..

Next Story