விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... வழக்கம்போல தெறிக்கவிடுமா?

goat
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்துள்ளனர். படத்தில் அவர் தோன்றும் மூன்றரை நிமிட காட்சியும் பிரம்மாண்டமாக இருப்பதாக விஜய் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களைப் போட்டுள்ளார். அது சுமாராக இருந்தாலும் படம் வரும்போது நல்லா ரீச்சாகும் என்கின்றனர்.
இதையும் படிங்க... ‘கோட்’ படத்துல இருக்கிற பெரிய மைனஸ் இதுதான்! ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?
விஜய் படத்தின் நீளம் சமீபகாலமாக அதிகமாகவே உள்ளது. அதனால் இந்தியன் 2 படத்தின் நீளம் அதிகமாக இருந்தது. அதாவது 3 மணி நேரம் ரன்னிங் டைம். அதன்பிறகு படத்தின் விறுவிறுப்புக்காக 12 நிமிடங்கள் குறைத்தார்கள்.
ஆனால் விஜய் படத்திற்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா லியோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடம். வாரிசு படத்தோட ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடம். பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் 2மணி நேரம் 35 நிமிடம்.
மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடம். பிகில் படத்தோட ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடம். சர்கார் படத்தோட ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம். மெர்சல் படத்துக்கு ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடம்.

Goat
இதனால் அந்தப் படங்களின் வசூல் பாதிக்கவில்லை. அதே நேரம் இந்த கோட் படத்திற்கு ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்களாக இருப்பது ஒரு பெரிய குறை அல்ல. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்பட்சத்தில் வழக்கம்போல ரசிகர்களின் ரசனையைத்; தெறிக்க விடும் என்றே நம்பலாம்.
எது எப்படியோ படம் இன்னும் வெளியாக இரண்டே வாரங்கள் தான் உள்ளன. அப்போது தெரிந்து விடும். படத்தில் விஜய் இளவயது தோற்றத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.