அலைபாயுதே பாணியில் அப்பவே திருமணம் செய்து கொண்ட நட்சத்திர காதல் ஜோடி… அட அவங்களா?

by sankaran v |   ( Updated:2025-04-09 02:59:29  )
alaipayuthe
X

alaipayuthe

எத்தனையோ நடிகர், நடிகைகள் தமிழ்சினிமாவில் காதல் திருமணம் செய்துள்ளனர். இருந்தாலும் இவர்களது திருமணம் தான் ரொம்பவே வித்தியாசமானது. காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள். இங்கு அது எப்படி மறைத்துள்ளது என்று நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

'மணம் போல் மாங்கல்யம்' என்ற திரைப்படம் தான் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படம். முதல் பார்வையிலேயே ஜெமினிகணேசனை சாவித்திரி காதலித்தார். அதற்கு என்ன காரணம்னா அவர் அதுவரை பார்த்த கதாநாயகன்ல இருந்து ஜெமினிகணேசன் வித்தியாசமானவராகத் தெரிந்தார்.

இரண்டாவது அவர் படித்தவராக இருந்ததால் பண்போடு பழகினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜெமினிகணேசன் பக்கம் சாவித்திரி தனது பார்வையைத் திருப்பிய போதெல்லாம் அவரது பார்வை தன்மீது பதிந்து இருந்ததை சாவித்திரியால் உணர முடிந்தது.

இது எல்லாம் சேர்ந்துதான் அப்போது 17 வயதாக இருந்த சாவித்திரியை நிலைதடுமாற வைத்தது. அவரது எக்ஸ்ரே பார்வை என்னை ஊடுருவியது. நாள்கள் செல்லச் செல்ல என்னை அறியாமல் நான் அவரிடம் மனதைப் பறிகொடுத்தேன் என சாவித்திரி தனது காதலைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

savithiri, geminiganesanஅம்பிகாபதி அமராவதி காதல் போல ஜெமினிகணேசன், சாவித்திரி காதல் தெய்வீகமாக இருந்தாலும் அதை வெளி உலகத்திற்கு அவர்களால் எளிதில் அறிவிக்க முடியவில்லை. அதுக்கு முதல் காரணம் தனது மனைவியைத் தவிர புஷ்பவல்லியுடன் நெருக்கமான உறவு இருந்தது.

அடுத்ததாக தனது மனைவி பாவுப்ஜி சாவித்திரியுடனான காதலை எப்படி ஏற்றுக்கொள்வார் என்ற பயமும் இருந்தது. தனது காதலைப் பற்றி வெளியே அறிவிக்க முடியாத சூழல் இருந்ததால அலைபாயுதே பாணியில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்வது என முடிவு எடுத்தனர்.

அப்படி திருமணம் செய்த அந்தத் தம்பதியினருக்கு திரையுலகம் வழங்கிய பரிசுதான் மணம்போல் மாங்கல்யம் பட வெற்றி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story