ரஜினி செய்த அந்தத் தவறு!. அமிதாப்புக்கு ஏற்பட்ட அவமானம்.. இதைக்கூடவா யாரும் கவனிக்கல?
பாரதிராஜா பல புதுமுகங்களைத் தமிழ்சினிமாவில் உருவாக்கி உள்ளார். மண்வாசனை படத்தில் பாண்டியனை அப்படித் தான் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் பாலகிருஷ்ணா மண்வாசனை படத்தை ரீமேக் பண்ணனும்னு நினைச்சாராம். அவரது அப்பா என்.டி.ராமராவ் அதை ஒத்துக்கொள்ளவில்லையாம். அதன்பிறகு அந்தப்படத்தைப் பார்த்ததும் காந்திமதி கேரக்டரில் பானுமதியை நடிக்க வைக்கணும்னு சொன்னாராம். அதே நேரத்தில் அவருக்கு உரிய மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று சொன்னாராம்.
இதையும் படிங்க... விஜய் அடம்பிடிக்க விட்டுக் கொடுத்த விஜயகாந்த்!.. ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் இப்படிலாம் நடந்திருக்கா?
அதே போல பானுமதி வரும்போது கார் கதவைத் திறந்து விட்டாராம். அப்பா சொல்லித்தந்தாரா என கேட்க அப்படியே ஷாக் ஆகிட்டாராம் பாலகிருஷ்ணா. அதே நேரம் பானுமதி அந்தக் காலத்தில் மரியாதையை சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. இப்ப உள்ள தலைமுறைக்கிட்ட அது இல்லன்னு சொன்னாங்களாம். அதே மாதிரி ஒரு சம்பவம் இப்போ நடந்துருக்கு.
அப்போது அமிதாப்பச்சன் படப்பிடிப்புக்கு வரும்போது பெரிய திருவிழா மாதிரி இருக்குமாம். ஆனால் இன்று வேட்டையன் படப்பிடிப்பில் வேறு மாதிரி நடந்து விட்டதாம். பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் அமிதாப்பச்சனுக்குப் போடப்பட்டு இருந்த பில்லை நிர்வாகம் செலுத்தவில்லையாம். அப்போது அமிதாப் அறையைக் காலி செய்து போனபோது ஓட்டல் நிர்வாகம், பில்லைக் கட்டிட்டுப் போங்கன்னு சொன்னாங்களாம். உடனே அமிதாப் டென்ஷனாகி அவரது பில்லை அவரே கட்டிவிட்டுச் சென்றாராம்.
இதையும் படிங்க... ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இருந்த பிரச்சினை! கேஸ் போட சொன்ன விஜயகாந்த்.. இதுதான் நடந்தது
சின்ன நடிகர்களுக்கோ, நடுத்தர நடிகர்களுக்கோ இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் அமிதாப் மாதிரியான பெரிய நடிகர்களுக்குக் கூட இது நடந்தது தான் அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவுக்கும் ரஜினி அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பர். அவரே இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இதற்கு தயாரிப்பாளர், இயக்குனர் மட்டுமல்லாமல் ரஜினியின் மீதும் தவறு உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.