பாடலே இல்லாமல் நடனம் அமைத்த இயக்குனர்... அட அது சூப்பர்ஹிட் பாடலாச்சே... ஷங்கரே அசந்து போனாராம்..!
புதுமையாக நடனம் அமைப்பதில் பலர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நடன இயக்குனர் கல்யாண். இவர் பாடலே இல்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்தத் தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார்.
நடன இயக்குனர் கல்யாண் முதன் முதலாக பணியாற்றிய படம் 'உயிரோடு உயிராக'. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் செம ஹிட். ஆனா படம் தான் சரியா போகல. தீனா படத்தில் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' பாடலுக்கு மாஸ் காட்டியிருப்பார். 'காதல் வெப்சைட்' பாடலும் எனக்கு லக்கி சேம்ப் மாதிரியே அஜீத் இருந்தாரு. தில், தூள் படங்களிலும் நடனம் அமைத்தேன். எல்லாப் பாடல்களுமே நல்லா ஹிட்.அஜீத் படத்தில் பில்லா பாடலுக்கு இசை அமைத்த விஷயம் தான் ரொம்ப புதுமையா இருந்தது.
'மைனேம் இஸ் பில்லா' பாடலுக்கு வெறும் 'டிக் டிக் டிக்' தான் மியூசிக். சாங்கே இல்லை. பிஜிஎம், மியூசிக் இருக்காது. அந்த டிக் டிக் டிக்கை வைத்துத் தான் எடுத்தோம். ஏன்னா அப்போ யுவன் ஊருல இல்ல. செட் வேற வெயிட்டிங். அதனால அந்த டிக் டிக் வச்சே பாடல எடுத்தோம்.
ஆலுமா டோலுமா பாட்டுக்கு எல்லாம் நான் மலேசியாவுல இருந்து அப்ப தான் செட்டுக்குப் போறேன். அப்போ சுட சுட பல்லவி வருது. என்னடா ஆகப்போகுதுன் னு 'பக் பக்' னு இருக்கும். சில நேரம் டென்சன்ல நல்ல வேலைப் பார்ப்பேன் போல இருக்கு. நான் எந்தப் பாடலுக்கும் அதிக நேரம் எடுத்ததில்லை. அந்நியன் படத்துல 'ரண்டக்க ரண்டக்க' பாடலுக்கு நான் தான் பண்ணினேன்.
அப்போ இயக்குனர் ஷங்கர் சார் எப்படி எப்படின்னு எல்லாம் சொன்னாரு. பெயிண்ட் பண்ற விஷயம், பஸ், லாரி, காஸ்டியூம் எல்லாம் சொன்னாரு. அது 6 வது நாளில் முடிச்சிட்டேன். 'பாட்டு முடிஞ்சிட்டு' சொன்னேன். 'என்னங்க சொல்றீங்க? அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா? நான் எல்லாம் 15 நாளுக்குக் குறைவா சாங் எடுக்கறதே இல்ல'ன்னு ஆச்சரியப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.