எஸ்.கே. பணம் கொடுத்து என்னை அசிங்கப்படுத்திட்டாரு… குமுறும் பிரபல நடிகர்

sivakarthikeyan
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஒரு ஹீரோ. விஜய் கையில துப்பாக்கியைக் கொடுத்ததுல இருந்து நான் தான் அடுத்த விஜய் என்கிற ரேஞ்ச்சுக்குப் போய் விட்டார். இப்போ விஜயின் ஜனநாயகன் படத்துக்கே சவால் விடுற வகையில பராசக்தியை ஒண்ணா விட்டு மோத விடறாங்க.
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்னு சும்மாவா சொன்னாங்க. விஜய் தன்னோட கடைசி படம் ஜனநாயகன்தான்னு அறிவிச்சிட்டாரு. அடுத்ததாக முழுநேர அரசியல்வாதியாக மாறப் போறாரு. அதனால அடுத்த விஜய் யாருன்னு கடும் போட்டி தமிழ்சினிமாவுல நடக்க ஆரம்பிச்சிடுச்சு.
இதுல தனுஷ், சிம்புக்கு இடையில் வழக்கமா போட்டி இருக்கும். இப்போ இவங்களுக்கு நடுவுல சிவகார்த்திகேயன் நான் தான் அந்தப் பையன்னு வந்து நிக்கிறாரு. இன்னொரு பக்கம் தனி ஆளாக அஜீத் மாஸ் காட்டி வருகிறார். இவங்களுக்கு இடையில சிவகார்த்திகேயன் தன்னோட அமரன் படத்துல இருந்து பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார்.
அடுத்து ரெட்ஜெயண்ட் மூவீஸ் அவரை பராசக்தியில் களம் இறக்குவதால் கூடுதல் எதிர்பார்ப்பு. அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் பிளாக் பாண்டி ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் கிட்ட இருந்த நட்பால, அம்மாவும் நானும் அவரை நேர்ல சந்திச்சிப் பேசலாம்னு போனோம். திடீர்னு மானேஜர் வந்தாரு. 20ஆயிரம் ரூபாயைக் கையில கொடுத்தாரு. அம்மா சொன்னாங்க. அவர் படத்துல நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்கன்னு கேட்கத்தான் வந்தோம்.
பணத்துக்காக வரலைன்னு சொல்லி அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு வந்துட்டோம். ஆனா மேனேஜர் என்ன சொன்னாருன்னு தெரியல. அதுக்கு அப்புறமா எஸ்.கே. எங்கிட்ட பேசுறது இல்ல என மனம் நொந்து பேசியுள்ளார் பிளாக் பாண்டி.