ரஜினி எப்படி என்னை அப்படி பேசலாம்? கிளைமாக்ஸ்ல கோபித்த நடிகரை சமாதானம் செய்த இயக்குனர்

by sankaran v |   ( Updated:2025-05-02 06:25:38  )
Rajnikanth
X

Rajnikanth

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படம் 1978ல் வெளியானது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ரஜினியைப் பார்க்க முடிந்தது. அருமையான நடிப்பு. இன்று வரை சிலாகித்துப் பேச வேண்டிய படம். இளையராஜாவின் இசையில் பாடல்களும் சூப்பர். அந்த வகையில் படத்தின் கிளைமாக்ஸில் நடந்த ஒரு விஷயத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் காட்சியில் சரத்பாபு டயலாக் பேப்பரைப் படிச்சிட்டுக் கோவிச்சிக்கிட்டு தனியாப் போய் உட்கார்ந்துருக்காரு. அசிஸ்டண்ட் டைரக்டர் போய் 'என்ன சார்?னு கேட்கறாரு. 'நானும் ஒரு பேரல் ஹீரோதான். எனக்கும் ஒரு பேரு இருக்கு. சாங் இருக்கு. கிளைமாக்ஸ்ல கூட எனக்கு உங்களைப் பிடிக்கலங்கற மாதிரி எழுதிருக்காரு. என்ன சார் இது? நான் ஒரு நல்ல கேரக்டர் சார். அவனாவது ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். உங்களை தங்கச்சி புரிய வச்சிட்டான்னு தான் டயலாக் வரணும். மாத்தச் சொல்லுங்க சார் அதை...'ன்னு சொல்றாரு சரத்பாபு.

அப்புறம் அசிஸ்டண்ட் போய் டைரக்டர் மகேந்திரன் சார்கிட்ட 'சரத் சார் இப்படி ஃபீல் பண்றாரு'ன்னு சொல்லிருக்காங்க. உடனே அப்பா போய், 'சரத் சினிமாவுல தான் கிளைமாக்ஸ்ல வந்து என் கண்ணைத் தொறந்துட்டே, மனசைத் திருத்திட்டே, முள்ளும் மலரும்னு எல்லாம் பேசுவாங்க. சில பேரு மண்ணுல போட்டு புதைக்கிற வரைக்கும் மாறவே மாட்டாங்க. காளிங்கறவன் அப்படிப்பட்ட கேரக்டர்தான்.

எல்லா படத்துக்கும் எல்லா கேரக்டருக்கும் ஒரு ஆர்க் இருக்கும்னு நினைக்கவே நினைக்காதே. அது கிடையாது. அது ஒரு கேரக்டர். அந்தக் கேரக்டர் அப்படிப் பேசுது. அவ்ளோதான்'னு புரிய வச்சிட்டுத்தான் நடிக்க வச்சாங்க. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் பயங்கரமான ப்ரண்ட்ஸ்சா ஆகிட்டாங்க. சரத்பாபு சார் இல்லாம அப்பா படமே பண்ண மாட்டேங்கற அளவுக்கு ஆகிட்டாங்க என்கிறார் டைரக்டர் ஜான் மகேந்திரன்.

Next Story