ஷூட்டிங்-கில் சூர்யாவுக்கு ஏற்பட்ட விபத்து... நெஞ்சில் ஓங்கி மிதித்த fighter... பதறிப்போன படக்குழுவினர்..!
சூர்யாவை படப்பிடிப்பில் வில்லன் நடிகர் எட்டி உதைத்ததாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக்கொண்டு மெனக்கெட்டு நடிக்கக்கூடிய ஒரு நடிகர் சூர்யா. இதனை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யா 10 வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாக உள்ளது. மேலும் பெரிய பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அந்தமானில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிங்கம் 3 திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி தான் அவர் பகிர்ந்திருந்தார். சிங்கம் 3 திரைப்படத்தில் ஒரு வில்லன் நடிகர் நடித்திருப்பார். அவரது பெயர் அனுப் சிங்.
இப்படத்தின் ஒரு காட்சியில் அனுப்சிங் சூர்யாவை எட்டி நெஞ்சில் மிதிக்க வேண்டும். அப்படி ஒரு காட்சியை எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் படத்தில் எல்லாம் நடிகர்கள் அடித்தவுடன் ஒரு ஐந்து அடிக்கு ரிவர்சில் செல்வார்கள். அதற்கு இடுப்பில் ஒரு பெல்ட் போன்று கட்டி நபர்கள் அவரை இழுப்பார்கள்.
உடனே அந்த நடிகர் அடித்தவுடன் பின்னோக்கி செல்வது போன்று நமக்கு தெரியும். அப்படி ஒரு காட்சியை எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சூர்யா இந்த காட்சியை ரியலாகவே எடுக்கலாம் என்று கூற அந்த நடிகரிடம் சூர்யாவை உதைப்பதற்கு அவரே பர்மிஷனும் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து அந்த நடிகர் முதலில் ஷாட் எடுக்கும் போது தடுமாறியதால், அடுத்த டேக் எடுக்கப்பட்டது. அப்போது சூர்யா அசால்டாக இருந்ததால் அந்த நடிகர் ஓடிவந்து ஒரு உதை உதைத்தார். உடனே சூர்யா நிலைகுலைந்து போனார். அப்போது படப்பிடிப்பில் இருந்த பலரும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். அந்த நடிகர் சூர்யாவிடம் வந்து மன்னித்து விடுங்கள் என்று கூறிய போது சூர்யா சிறிது கூட கோபப்படாமல் நான்தான் அசால்ட்டாக இருந்துவிட்டேன்.
உங்கள் மீது எந்த தவறும் கிடையாது. அதனால் நீங்கள் எந்த ஒரு வருத்தமும் படவேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். ஆனால் அந்த அடி சூர்யாவுக்கு மிகவும் வலித்ததாக அவர் ஸ்டன்ட் மாஸ்டரிடம் கூறி இருக்கின்றார். அந்த இடத்தில் வேற ஏதாவது நடிகர் இருந்திருந்தால் கட்டாயம் கோபப்பட்டு இருப்பார். ஆனால் சூர்யா அப்படி எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் சாந்தமாக சென்றுவிட்டாராம். இந்த விஷயத்தை செய்யாறு பாலு தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.