Cinema History
‘16 வயதினிலே’ படத்தை கேவலமா நினைச்சு நடிக்க மறுத்த நடிகர்கள் – அட அந்த நடிகர் கூடவா!..
பாரதிராஜாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 16 வயதினிலே திரைப்படம். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த பாரதிராஜா இந்த படத்தின் மூலம்தான் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார். அதுவும் இந்த படத்தின் தயாரிப்பாளரான ராஜ் கண்ணு நீதான் என் அடுத்த படத்தின் டைரக்டர். கதை இருந்தால் சொல்லு என சொல்லி இருக்கிறார்.
அவரிடம் மூன்று கதைகளை சொன்ன பாரதிராஜா, ராஜ் கண்ணு 16 வயதினிலே படத்தின் கதையை ஓகே பண்ணியிருக்கிறார். அப்போது முதலில் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் நடிகர் நாகேஷ் மற்றும் நடிகை ரோஜா ரமணியாம். சப்பாணி கதாபாத்திரத்தில் நாகேஷ் மயில் கதாபாத்திரத்தில் ரோஜா ரமணியும் நடிப்பதாக இருந்ததாம்.
இதையும் படிங்க : விடிவுகாலம் பொறாந்தாச்சு! விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் கண்ணாடி ஹீரோ – இது லிஸ்ட்லயே இல்லையே
ஆனால் ஏற்கனவே பாரதிராஜாவிற்கு கமல் நல்ல அறிமுகம் என்பதால் இந்த படத்தில் கமலை நடிக்க வலியுறுத்தினாராம் பாரதிராஜா. இந்த படத்தின் கதையை கமலிடம் சொன்னதும் கமலுக்கும் பிடித்து போக அவரும் சரி என வந்திருக்கிறார் .படத்தின் கதைப்படி ஒரு அழுக்கான தோற்றத்துடன் வாய் நிறைய வெற்றிலை பாக்குடன் கோணலாக வைத்துக் கொண்டு பேசும் கதாபாத்திரமாக கமல் இந்த படத்தில் நடித்திருப்பார்.
அம்மா வையும் காசு கொடு என்ற அந்த ஒரு வசனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதைச் சொன்னதும் உடனே கமல் போட்டிருந்த சட்டையை கழட்டி கீழே போட்டு மண்ணில் உருட்டி பெரட்டி சாணி மிதிக்கிற மாதிரி காலை வைத்து மிதித்து அதன் பிறகு அந்த சட்டையை போட்டுக்கொண்டு வெற்றிலையையும் கொஞ்சம் போட்டுக்கொண்டு இப்படித்தானே நடிக்க வேண்டும் என ஸ்பாட்டிலேயே ஒரு டெமோ காண்பித்தாராம் கமல்.
இதையும் படிங்க : அந்த காமெடி தெரியும்.. ஆனா படம் தெரியாது!.. வடிவேலுவின் ஹிட்டு காமெடியில் வெளிவந்த 5 ஃப்ளாப் படங்கள்!..
இதைப் பார்த்ததும் பாரதிராஜா இதுதாண்டா எனக்கு வேணும். நல்ல நடிகன்டா நீ என அப்பவே மனதார பாராட்டினாராம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறிய பாரதிராஜா முதலில் இந்த 16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க வேண்டியது இரு முக்கிய நடிகர்கள்.அதுவும் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள். அப்போது இந்த படத்தின் கதையையும் கதாபாத்திரத்தையும் பற்றி சொல்லும் போது இது என்ன கேவலமாக இருக்கிறது என சொல்லி நடிக்க மறுத்து விட்டார்களாம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் .ஆனால் நடிகர்களாக இல்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க : பாரதிராஜாக்கிட்ட வச்சிக்கிட்டா அவ்ளோதான்.. கன்னம் சிவக்க அடி வாங்கிய உதவி இயக்குனர்!..