Connect with us
vikki

Cinema News

விடிவுகாலம் பொறாந்தாச்சு! விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் கண்ணாடி ஹீரோ – இது லிஸ்ட்லயே இல்லையே

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து பல படங்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்தார். விஜய் சேதுபதி, சூர்யா ஆகிய அவர்களுடன் இணைந்து பணியாற்றிய விக்னேஷ் சிவன் தற்போது அஜித் பட விவகாரத்தால் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார்.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் என்ன செய்யப் போகிறார் என அவரை சார்ந்த ரசிகர்கள் பலரும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். பிரதீப் ரங்க நாதனை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்தப் படமும் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

இதையும் படிங்க : விஜயை கைது செய்யனும்! ரசிகர்களை ஏவிவிட்டு என்ன செஞ்சாரு தெரியுமா? டிஜிபி அலுவலத்தில் ஆவேசப்பெண்மணி புகார்

vikki1

vikki1

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான நிற்கும் ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவனைப் பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். மிஸ்கின் சமீப காலமாக படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் மாவீரன் படத்திலும் அவர்தான் ஒரு மிகப்பெரிய வில்லனாக நடித்திருக்கிறாராம். அந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்காக படத்தின் இயக்குனர் மடோனா மிஸ்கின் இடம் வந்து கதை சொன்னாராம். மடோனா கதை சொன்ன விதம் மிஸ்கினுக்கு மிகவும் பிடித்து போய் இருந்ததாம்.

இதையும் படிங்க : அந்த காமெடி தெரியும்.. ஆனா படம் தெரியாது!.. வடிவேலுவின் ஹிட்டு காமெடியில் வெளிவந்த 5 ஃப்ளாப் படங்கள்!..

இதைக் குறிப்பிட்டு பேசிய மிஸ்கின் தமிழ் சினிமாவில் இரண்டே பேர் தான் கதை சொல்லுவதில் கில்லாடியாக இருக்கிறார்கள். ஒன்று மடோனா மற்றொருவர் விக்னேஷ் சிவன் என கூறினார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் மிஷ்கினிடம் கதை சொல்லி இருக்கிறாராம்.

vikki2

vikki2

அவர் கதை சொன்ன விதம் யாருமே இதுவரை அப்படி சொன்னதில்லை. அந்த அளவுக்கு அந்தப் பையன் பிரமாதமாக கதை சொல்லி இருந்தார். மாவீரன் படத்திற்கு பிறகு என் அடுத்த படம் விக்னேஷ் சிவன் கூட தான் என ஆணித்தரமாக பேசினார் மிஸ்கின்.

இதையும் படிங்க : ஒரே நேரத்தில் காதலி, மனைவி, தங்கை, அம்மாவா? யாருப்பா அந்த நடிகர்? சொல்லமுடியாத கொடுமை

google news
Continue Reading

More in Cinema News

To Top