ரசிகர்களை அதிகமாக மதிக்கிற நடிகர்கள் இவர்கள்தான்?? அப்படி யாராவது இருக்காங்களா!!
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் அவரவர்களது ரசிகர்கள் மீது எவ்வளவு அன்புகொண்டு இருக்கிறார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே நற்பணி மன்றமாக மாற்றினார். அதன் பின் கமல் ரசிகர்கள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால் கமல் ரசிகர்களுக்கு என்றே ஒரு மரியாதை உருவானது.
விஜய் மற்றும் அஜித்தை பொறுத்தவரை தனது ரசிகர்களை உயிராக மதிப்பவர்கள். எப்போதும் தனது ரசிகர்களிடம் அவர்களது குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவார்கள். குறிப்பாக அஜித், தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். இவ்வாறு ரசிகர்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுபவராக டாப் நடிகர்கள் திகழ்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் “தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகமாக மதிப்பவர்கள் யார்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் “ரசிகர்களை அதிகமாக மதிக்கின்ற நடிகர் யார் தெரியுமா? தன்னுடைய திரைப்படங்களுக்கு 190 ரூபாய் டிக்கெட்டை தாண்டி 500, 1000 என டிக்கெட்டுகளை விற்கின்றார்களே, அதை எல்லாம் யார் தடுக்கிறார்களோ அவர்கள்தான் ரசிகர்களை மதிக்கக்கூடிய நடிகர்கள்” என கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “அப்படிப்பட்ட நடிகர்கள் இனிமேலாவது தமிழ் சினிமாவில் உருவாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.