சூரியுடன் நடிச்சதால் நடிகைக்கு வந்த சிக்கல்… எல்லா படத்துலயுமே அதுக்குத் தான் கூப்பிடுறாங்களாம்..!

by sankaran v |   ( Updated:2025-04-08 01:15:19  )
actor soori
X

actor soori

2016ல் எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், நிக்கி கல்ரானி உள்பட பலர் நடித்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். சி.சத்யா இசையில் பாடல்கள் சுமார் ரகங்கள். இந்தப் படத்தில் காமெடி நடிகராக சூரி நடித்து இருந்தார். படத்தில் அவருடைய மனைவியாக ரேஷ்மா நடித்து இருந்தார்.

அந்தப் படத்தில் புஷ்பா என்ற பெயரில் நடித்து அவர் பிரபலமானார். படத்திலேயே சூரியை புஷ்பா புருஷனா நீன்னு கேட்டே டார்ச்சர் பண்ணுவாங்க. படம் முழுக்க காமெடியாக இருக்கும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் பெயருக்கேற்ப படம் முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது.

இயக்குனர் எழில் இந்தப் படத்தில் முத்திரைப் பதித்து விட்டார் என்றே சொல்லலாம்.அந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகை ரேஷ்மா வருத்தப்பட்டு ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க.

vvv, actress rashmaவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நான் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி பெரிய ஹிட் ஆனது. அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே அதே சாயலில் தான் இருந்தது. ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் பெண்ணாகத்தான் நடிக்கக் கேட்டார்கள். அதனால் சினிமாவே வேண்டாம் என கூறிவிட்டு டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன் என்கிறார் நடிகை ரேஷ்மா.

ரேஷ்மா அந்தப் படத்துக்குப் பிறகு கோ2, மணல் கயிறு 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3ல் வந்து கலக்கினார். இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி வாணி ராணி, மரகத வீணை, உயிர் மெய், ஆண்டாள் அழகர், வம்சம் ஆகிய டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிவி, சினிமாவுக்கு வரும் முன் இவள் ஒரு விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story