More
Categories: Cinema News latest news

பாட்டு வந்துருக்குன்னு சொன்னிங்க… எங்கப்பா லிங்க்!.. அனிருத்தை கலாய்த்த நடிகை!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் இசை அமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகிவிடும் என்கிற அளவிற்கு அவரது பாட்டிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

விஜய், அஜித், ரஜினி போன்ற பெரும் புள்ளிகளே அவர்களது திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். கமல் நடித்த விக்ரம் படத்திற்கு அனிருத் அமைத்த இசை பெரும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படத்திற்கும் , மேலும் இவை இல்லாமல் ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

Advertising
Advertising

அதேபோல ஜெய்லர் திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார் இப்படியாக தொடர்ந்து பெரும் நடிகர்கள் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

தற்சமயம் மலையாளத்தில் செசம் மெஹில் பாத்திமா என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். என்ன படத்தின்  டட்டா டட்டாரா என்கிற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை அனிருத்தும் கல்யாணி ப்ரியதர்ஷனும் சேர்ந்து பாடியிருந்தனர். தமிழில் மாநாடு, ஹீரோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன். தயாரிப்பாளர் பிரியதர்ஷனனி மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடல் நேற்று வெளியாக இருந்த நிலையில் சிறிது காலதாமதம் ஆனது. இந்த நிலையில் அனிருத் வெளியிட்டிருந்த ப்ரோமோவை பதிவிட்ட கல்யாணி ப்ரியதர்ஷனி “இன்னும் எனக்கு லிங்க் காட்டல” என அனிருத்தை கலாய்த்து பதிவிட்டிருந்தார்.

Published by
Rajkumar

Recent Posts