Cinema News
படுக்கையறை காட்சியெல்லாம் எனக்கு அத்துப்புடி! ஷகீலாவையே மிஞ்சிய நடிகைகள்
சினிமாவில் சாதிக்க வரும் ஒவ்வொரு நடிகையும் எதிர்கொள்ளும் பிரச்சனை அட்ஜஸ்ட்மென்ட். வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் முறைதான் இந்த அட்ஜஸ்ட்மென்ட். ஆனால் இது இப்பொழுது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. கதைக்கேற்ப படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடிக்க எத்தனையோ நடிகைகள் முன் வந்து விட்டனர். முதலில் எல்லாம் பிட்டு படம் என்று தனியாகவே இருக்கும் ஆனால் அது இப்பொழுது சினிமாவில் சர்வ சாதாரணமாக காட்டப்படுகின்றது.
அதுவே ஓடிடி தளமாக இருந்தால் எந்த ஒரு ரூல்ஸும் கிடையாது. ஏனெனில் சென்சார் போர்டு என்ற ஒரு விஷயமே ஒடிடி தளத்திற்கு கிடையாது. அதனால் ஏராளமான வெப் சீரிஸ்கள் அந்த மாதிரி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் ஒரு சில நடிகைகள் படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடித்திருக்கின்றனர். அந்த லிஸ்ட்டை தான் இப்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க :இந்த பொம்பளைய லேசா நினைச்சிராதீங்க? வடிவுக்கரசி பற்றி கமல் சொன்ன சீக்ரெட்!…
ரைசா வில்சன் : மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைசாவை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் ஹீரோயின் படம் பியார் பிரேமா காதல். அந்தப் படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் ரைசா. அந்த படத்தில் இருவருமே அவ்வப்போது நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார்கள். சில காட்சிகள் மிகவும் அத்துமீறலாக இருந்திருக்கும். இருந்தாலும் கதைக்கு தேவைப்படுதால் ரைசா அந்த மாதிரி நடித்திருப்பார்.
பிரியா ஆனந்த் : வளரும் நடிகைகளில் பிரியா ஆனந்தும் ஒருவர். இயல்பாகவே இவர் எந்த ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்காதவர். ஆனால் விக்ரம் மகன் துரு விக்ரம் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அவர் உடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார் பிரியா ஆனந்த். காருக்குள் நடக்கும் அந்த காட்சியை பார்த்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார் பிரியா ஆனந்த். ஏனெனில் அதுவரை எந்த படத்திலும் ஹோம்லியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த பிரியா ஆனந்த் இப்படி ஒரு காட்சியில் எப்படி நடித்தார் என்று ரசிகர்கள் அந்த சமயம் அதிருப்தியில் இருந்தார்கள்.
இதையும் படிங்க : ஒரு நடிகைக்காக பாரதிராஜாவை விரட்டியடித்த படக்குழு! அப்படி என்ன செஞ்சிருப்பார்?
சமந்தா : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஊ சொல்லுறியா என்ற பாடல் மூலம் ஐட்டம் நடனத்தை ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சமந்தா. இவரும் படுக்கையறை காட்சியில் தாராளமாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் இல்லை வெப் சீரிஸில். தி ஃபேமிலி மேன் 2 என்ற அந்தத் தொடரில் சமந்தா மிக மோசமான படுக்கையறை காட்சியில் தாராளமாக நடித்திருக்கிறார்.
சுருதிஹாசன் : இவரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்து வரும் நடிகை. ஆனால் சமீப காலமாக தமிழை விட தெலுங்கில் தான் அதிக பட வாய்ப்புகள் சுருதியை தேடி வந்து கொண்டிருக்கின்றன. இவரும் தனுஷும் சேர்த்து நடித்த 3 என்ற திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திலும் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம் காட்டி நடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க : விடிவுகாலம் பொறாந்தாச்சு! விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் கண்ணாடி ஹீரோ – இது லிஸ்ட்லயே இல்லையே
தமன்னா : மேலே சொன்ன 4 நடிகைகளை விட ஒரு படி மேலாக தமன்னா மிக மோசமாக இந்த மாதிரி காட்சிகளில் சமீபத்தில் நடித்து பெரிய சர்ச்சைக்கு ஆளானார். தி லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற சீரிஸில் வெளிப்படையாகவே தன்னுடைய காதலருடன் இணைந்து அந்த மாதிரி காட்சிகளில் தாராளமாக நடித்திருப்பார் தமன்னா. அதனால் பல பேர் இவரை எதிர்த்து கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இவர்கள் மட்டும் இல்லை. இன்னும் ஒரு சில நடிகைகள் நடிப்பிற்காகவும் கதைக்கு முக்கியத்துவம் அமைந்ததாலும் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடித்திருக்கின்றனர்.