முத்தக்காட்சிக்கு பயந்து கமலுடன் நடிக்க மறுத்த நடிகைகள்… லிஸ்ட் பெருசா இருக்கே!...

by Arun Prasad |   ( Updated:2023-02-09 01:55:35  )
Kamal Haasan
X

Kamal Haasan

கமல்ஹாசன் என்ற பெயரை கேட்டால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அவரின் வித்தியாசமான நடிப்பும் அதற்காக அவர் செய்யும் மெனக்கெடல்களும்தான். ஆனால் இதுபோக கமல்ஹாசன் என்ற பெயரை கேட்டதும் அவரின் முத்தக்காட்சிகள் எவருக்கும் ஞாபகம் வராமல் இருக்காது.

Kamal Haasan

Kamal Haasan

தமிழ் சினிமாவில் மிகவும் ஆழமான முத்தக்காட்சிகளை படமாக்கிய முதல் நபர் என்று கூட கமல்ஹாசனை கூறலாம். ஆனால் அந்த முத்தக்காட்சிகள் ஆபாசமாக தெரியாமல் அந்த கதைப்போக்கில் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்தளவுக்கு மிக ரசனையோடு முத்தக்காட்சிகளை உருவாக்குவதில் கைதத்தேர்ந்தவராக கமல்ஹாசன் திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது வெளியான ஒரு கமல்ஹாசன் படத்தில் ஒரு ஆழமான முத்தக்காட்சி இருந்ததால், இத்திரைப்படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்கவேண்டும் என்று ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் வேண்டுகோள் விடுக்கச்சொன்னதாக கூட ஒரு தகவல் உண்டு. அந்த அளவுக்கு முத்தக்காட்சிகளால் தமிழ் சினிமாவையே பரபரப்புக்குள்ளாக்கியவர் கமல்ஹாசன்.

Kamal Haasan

Kamal Haasan

இந்த நிலையில் கமல்ஹாசனின் முத்தக்காட்சிக்கு பயந்து நடிக்க மறுத்த நடிககைகள் குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Nadhiya

Nadhiya

அதாவது ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நதியாவை அணுகினார்களாம். ஆனால் நதியா, கமல்ஹாசன் திரைப்படத்தில் முத்தக்காட்சி இருக்கும் என்பதாலும், மிக கவர்ச்சியாக நடிக்கவேண்டியது நிலை வரும் என்பதாலும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். நதியாவுக்கு பல லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினார்களாம். ஆனால் அப்படியும் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Suvalakshmi

Suvalakshmi

அதே போல் பிரபல நடிகை சுவலட்சுமிக்கும் கமல்ஹாசன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாம். முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யே பார்த்து பயந்த நபர் இவர்தானாம்… கெத்து காட்டும் பிரபல பத்திரிக்கையாளர்… ஓஹோ!

Next Story