Cinema News
உதயநிதிக்கு பெரிய தலைவலியே விஜய்தான்! கேப்டனும் ரஜினியும் சேர்ந்த கலவை.. அசைக்க முடியுமா?
Actor Vijay: இப்போது விஜயின் ட்விட்டர் வாழ்த்து தான் பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன விஜய் தமிழ்நாட்டில் 40க்கு 40 வெற்றி பெற்று ஒரு தனித்துவமான கட்சியாக இருக்கும் திமுகவுக்கு இதுவரை வாழ்த்து சொல்லவே இல்லை. இதை பற்றி தான் இப்போது இணையதளம் முழுவதும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
இதைப் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் என்பவர் சில சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் இருந்தே விஜயை அடித்து நொறுக்க திமுக அடுத்த அடுத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் ஒருவரை அடிக்க அடிக்க தான் அவருடைய பலம் அதிகமாகும் என்பதற்கு உதாரணமாக மாறி வருகிறார் விஜய்.
இதையும் படிங்க: விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேசல…? பிரபலம் கேட்பது நியாயம் தான்..! இப்பவாவது கவனிங்க தளபதி..!
தற்போது பல உதவிகளை செய்து வரும் விஜய் அவர் சொந்த காசை போட்டு தான் இந்த உதவிகளை செய்து வருகிறார். மற்றவர்களைப் போல கட்சி காசில் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் இரு வக்கீல்கள் என்ற விகிதத்தில் மக்கள் குறைகளை தீர்த்தும் வருகிறார் .அவருடைய அரசியல் strategy என்பது ஒரு பிரமிப்பாகவே பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தை செய்தது போலவே விஜயையும் செய்ய நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தை அப்போதைய கருணாநிதி தூக்கி எறிந்தார். அதைப்போல விஜய்யையும் செய்ய நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது. சரியான strategy உடன் அவர் அரசியலை களம் காண இருக்கிறார் .
இதையும் படிங்க: தனக்குத்தான் எல்லா தெரியும்னு ஆடக் கூடாது! தன்னை கிண்டலடித்த சிம்புவுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர்
ஒரு பக்கம் ரஜினியின் மாஸ் இன்னொரு பக்கம் விஜயகாந்திற்கு இருக்கும் தொண்டர் பலம் என இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறார் விஜய். அதனால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் ஒரு பெரிய கூட்டணியுடன் இறங்க காத்திருக்கிறார். ஒரு பக்கம் சீமான் இன்னொரு பக்கம் திருமாவளவன் என மூன்று பேரும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2026 தேர்தலில் உதயநிதிக்கு பெரும் தலைவலியாக இருப்பதே விஜய் தான். பிரதமர் மோடிக்கு மட்டும் வாழ்த்து சொன்னதற்கு காரணம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேளை எதிர்க்கட்சித் தலைவராக விஜய் மாறும் நிலைமை வந்தால் மோடியை சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்.
இதையும் படிங்க: தனக்குத்தான் எல்லா தெரியும்னு ஆடக் கூடாது! தன்னை கிண்டலடித்த சிம்புவுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர்
ஏனெனில் விஜயகாந்தை மோடி வந்து சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவை வந்து சந்தித்திருக்கிறார். அப்படி விஜயையும் சந்திக்கும் ஒரு நாள் வரலாம். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒரு நட்பு ரீதியில் பிரதமர் மோடிக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருப்பார். இதுவே திமுகவுக்கு செருப்படி விழுந்த மாதிரி அமைந்திருக்கும் என ராவுத்தர் இப்ராகிம் அந்த பேட்டியில் காரசாரமாக பேசியிருக்கிறார்.