பதினாறு வயதினிலே படத்தின் பட்ஜெட் இதுதான்!.. இத கேட்டாலே கண்ணு கலங்குதே!..

by சிவா |
pathinaru
X

திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில இயக்குனர்கள் புதிய முயற்சிகளை செய்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள். பரிசோதனை முயற்சியாக இருந்தாலும் சில இயக்குனர்கள் துணிந்து செய்வார்கள். இது எல்லா காலட்டத்திலும் நடக்கும். அப்படித்தான் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா என பலரும் வந்தனர்.

இதில், மற்றவர்கள் ஒரு புது வித பாணியில் கதையை சொன்னாலும் பாரதிராஜா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தார். அப்போதெல்லாம் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் மட்டுமே நடக்கும். ஆனால், பாரதிராஜாதான் கேமராவை தூக்கி கொண்டு கிராமத்துக்கு போனார். ‘நீ வந்ததால்தான் என்னால் படத்தில் நடிக்கமுடியவில்லை’ என எம்.ஜி.ஆரே ஒரு மேடையில் பேசி இருந்தார்.

இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் சிக்கி சின்னாபின்னமான பாண்டியன்!.. ஷாக் தகவலை சொன்ன ரேவதி!. இவ்வளவு நடந்திருக்கா!..

கிராமத்து மனிதர்களின் இயலான உணர்வுகளை கேமராவில் படம்பிடித்து காட்டினார். கிராமத்து மனிதர்களின் கோபம், காதல், பகை, ஆத்திரம் என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் பிரதிபலித்தார். இவர் இயக்கிய முதல் படம் பதினாறு வயதினிலே. முதலில் இந்த படத்தில் எல்லோருமே புதுமுகமாக இருக்க வேண்டும் என்றுதான் பாரதிராஜா நினைத்தார்.

kamal

ராஜாமணி என்கிற நடிகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரின் நல விரும்பிகள் சொன்னதால் ஸ்ரீதேவி, கமல், ரஜினி என மாறியது. இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 15 ஆயிரம், ஸ்ரீதேவிக்கு 10 ஆயிரம், ரஜினிக்கு 3 ஆயிரம் சம்பளம் பேசினார் பாரதிராஜா. ரஜினிக்கு கொடுத்தது என்னவோ 2500 மட்டும்தான்.

இதையும் படிங்க: பெண்ணுடன் இருப்பதே தனி சுகம்தான்! பாரதிராஜாவுக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் இதுதானாம்

மிகவும் குறைந்த செலவில் இந்த படத்தை எடுத்தார் பாரதிராஜா. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இப்போது நினைத்தால் இது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது ஒரு நாள் படப்பிடிப்பு செலவே சம்பளம் இல்லாமல் 5 லட்சத்தை தாண்டும் நிலையில், பதினாறு வயதினிலே படத்தின் பட்ஜெட்டே இதுதான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.

இத்தனைக்கும் தயாரிப்பாளரிடம் சில நாட்கள் பணம் இருக்காது. இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கேமராவில் பிலிமே இல்லாமல் கமலை நடிக்க சொல்லி படமெடுப்பது போல சீன் போடுவாராம் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் கமலுக்கும் இது தெரியவர அவர் கோபப்படாமல் சிரித்த கதையும் நடந்தது. அப்படி குறைந்த பட்ஜெட்டில் உருவான பதினாறு வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு கிளாசிக் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Next Story