கார் டிரைவருக்காக அப்படி ஒரு விஷயத்தைச் செய்த கேப்டன்...! அந்த மனசு தான் கடவுள்..!

by sankaran v |
VK SAC
X

VK SAC

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜயகாந்தின் பெரிய மனசு பற்றி தனது நினைவுகளை பிரபல படத் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் அசைபோடுகிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க... மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…

சட்டம் ஒரு இருட்டறை படத்துக்கு விஜயகாந்த் சொந்தமாக டயலாக் பேசல. அவருக்கு சுரேந்தர் டப்பிங் கொடுத்தார். நான் முயற்சி பண்றேன்னு சொன்னாரு. நான் தான் ஒத்துக்கல. இன்னொரு வாய்ஸ் வந்தா நல்லாருக்கும்னு சுரேந்தரை பேசினேன். அடுத்து நெஞ்சிலே துணிவிருந்தால் வில்லேஜ் சப்ஜெக்ட். அதுக்கு அவரோட வாய்ஸ் தான். அதே போல விஜயகாந்துக்குக் கொடுக்குற குணம் சூப்பர்.

கார் டிரைவர் எஸ்.கே.சுப்பையா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கான். விஜயகாந்தும் சொல்றார். "டேய், சந்திரசேகர் படம் எடுத்தாருன்னா நமக்க லாபம் வரும்டா. அப்போ உனக்கு ஏதாவது பண்ணித் தாரே"ன்னு சொல்றார். 'சார் நீங்க படம் பண்ணிக் கொடுங்க சார்'னு எங்கிட்ட கேட்குறான். டிரைவருக்காக அப்படி எடுத்த படம் தான் பெரியண்ணா.

அந்தப் படத்துக்காக ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கல. "டிரைவர்கிட்ட காசு இல்ல. நீ பைனான்ஸ் வாங்கி படத்தைப் பண்ணு. என்ன வந்துருக்குன்னு சொல்லு. என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்"னாரு விஜயகாந்த். நானும் சம்பளம் எடுக்கல. விஜயகாந்தும் எடுக்கல. படம் நல்லா லாபம்.

Periyanna

Periyanna

முடிஞ்சதும் வந்த லாபத்துல 25 லட்சத்தைக் கொண்டு போய் நானும், சுப்பையாவும் விஜயகாந்திடம் கொடுத்தோம். "மீதி எவ்வளவு இருக்கு"ன்னு கேட்டாரு. இவ்வளவு இருக்குன்னு சொன்னோம். அப்பவும் "பணமா அவன்கிட்ட கொடுக்காத. வீடு வாங்கிக் கொடுத்துரு. ரெண்டு பிள்ளைங்க பேருல டெப்பாசிட் பண்ணு"ன்னு சொல்லிட்டாரு.

அப்பவே 23 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கிக் கொடுத்தோம். 2 குழந்தைங்க பேருல தலா 5 லட்சம் டெபாசிட் போட்டோம். அப்படி ஒரு தாராள மனசு அவருக்கு என்று நெகிழ்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Next Story