ப்ளாட்ட கட்டுங்க.. கோடியில் புரளுங்க! வாய்ப்பு இல்லைனாலும் வாடகை விட்டு சம்பாதிக்கும் பிரபலங்கள்

Published on: February 1, 2024
sneha
---Advertisement---

Cinema Actors: சினிமாவை நம்பியே கடைசி வரை நம்பியிருக்க முடியாது. சினிமாவில் சாதிப்பது என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது. அதுவும் நல்ல ரீச்சில் இருக்கும் போதே திடீரென சறுக்கலும் வரத்தான் செய்யும். அதனால் எதிர்காலத்தின் தேவை கருதி சம்பாதிக்கும் போதே எதிர்கால வருமானத்திற்கு நமக்கு என்று எதாவது ஒரு தொழில் கைவசம் இருக்க வேண்டும்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் ஒரு சில பேர் ஆங்காங்கே ப்ளாட் கட்டி வாடைகைக்கு விட்டு விடுகின்றனர், அது வாழ் நாள் வரைக்கும் அவர்களுக்கு ஒரு வருமானமாக வந்து கொண்டே இருக்கும். அப்படி எந்தெந்த பிரபலங்கள் வாடகையை வைத்து பொழப்பை ஓட்டி வருகின்றனர் என்பதை பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரு கார்த்திக் சுப்பாராஜ்.. கமலுக்கு ஒரு லோகி! கேப்டனுக்கு இவர்தான் – விஜயகாந்துக்காக உருவான படம்

நடிகர் செந்தில் 80, 90கள் காலகட்டத்தில் ஒரு புகழ்மிக்க காமெடி நடிகராக வலம் வந்தார். ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு அவருடைய காமெடி எல்லாம் எடுபடவில்லை. அதனால் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் 40 போஷன்ஸ் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதந்தோறும் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறாராம்.

நடிகை ராதா 80களின் கனவுக்கன்னியாக இருந்தவர். கமல், ரஜினிக்கு பெரும்பாலும் ஜோடியாக நடித்தவர். இவருடன் சேர்ந்து ராதாவின் சகோதரி அம்பிகாவும் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்துதான் வளரசவாக்கத்தில் சீரியல் எடுப்பதற்காக அவருடைய ஸ்டூடியோவை செட்டுகள் அமைப்பதற்காக வாடகைக்கு விட்டு வருகிறாராம்.

இதையும் படிங்க: இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…

நடிகர் சின்னி ஜெயந்த் கார்த்திக், முரளி இவர்களுக்கெல்லாம் அந்த காலத்தில் நண்பர் சின்னி ஜெயந்த்தான். அவர்களின் பெரும்பாலான படங்களில் சின்னி ஜெயந்த்தான் நண்பர் கேரக்டரில் நடிப்பார். கூடவே நகைச்சுவை மற்றும் மிமிக்ரி செய்வதில் சிறந்த நடிகர் சின்னி ஜெயந்த். இவரும் டி. நகரில் மூன்றடுக்கு காம்ப்ளக்ஸில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மாதம் இவருக்கும் இந்த காம்ப்ளக்ஸ் மூலம் லட்சகணக்கில் வருமானம் வருகிறதாம்.

சினேகா ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக புன்னகை அரசியாக வலம் வந்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்துதிருமணம் செய்து கொண்ட சினேகா தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்து வரும் சினேகாவுக்கு சொந்தமாக பெங்களூரில் நிறைய அப்பார்ட்மெண்ட்கள் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: ‘லியோ’ படம் ஒன்னும் சும்மா ஓடல! அதுக்கு பின்னாடி இருந்தது இவங்கதான்.. பிரபல இயக்குனர் பகீர்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.