400 கோடியில் தயாராகும் கமலின் பிரம்மாண்ட படம்…! அமெரிக்காவில் இந்த வேலைதான் நடக்குதா?

by sankaran v |   ( Updated:2025-04-05 04:57:46  )
kamal 237
X

kamal 237

Kamal Hassan: கமல் படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி அவ்வப்போது கொடுத்து வருபவர் மூத்த பத்திரிகையாளர் தேவமணி. இவர் இப்போது ஒரு புதுத் தகவலை தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

கமல் தற்போது அமெரிக்காவில் போய் இருந்து சில வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார். கமல் தனது 237வது படத்தை அன்பறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார். அன்பறிவு படத்திற்கான வேலைகள்தான் அமெரிக்காவில் நடந்து கொண்டுள்ளது. கதை விவாதம், கேரக்டர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். படத்திற்கு 400 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் இப்போது கேஜிஎப் பட புகழ் யாஷ்சும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal anbarivuகமலே அவரை விரும்பி படத்தில் நடிக்க வைக்கும் எண்ணத்தில் உள்ளாராம். அதே போல யாஷூம் மற்றவர்களைப் போல நானும் கமலின் படத்தில் நடிக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்றார். அதேபோல கமல் வில்லனாக நடித்த படம் கல்கி 2898 ஏடி. அந்தப் படத்தின் நாயகன் பிரபாஸ்சுக்கும் கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததாம்.

அதனால்தான் கமல் அந்தப் படத்தில் வில்லனாகவும், பிரபாஸ் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அமிதாப்பச்சனும் அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. கமல் தன்னைப்போலவே முன்னிறுத்திப் படங்களை எடுப்பதில்லை. தன்னைப் போலவே மற்ற நடிகர்களும் புகழ்பெற வேண்டும் என்று நினைப்பவர். அந்த வகையில்தான் மேற்கண்ட நடிகர்களையும் படத்தில் இணைத்து அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை எழுதப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு அவர் தொடர்ந்துள்ளார்.

கமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படம் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய ரோலில் சிம்புவும் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் இனி மெல்ல மெல்ல வரத் தொடங்கும். கமலும், சிம்புவும் முதன்முறையாக இணைவதால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

Next Story