கிரேட் எஸ்கேப் ஆன கமல்; அவசரப்பட்டு போய் ஆப்பு வங்கிய ஆர்யா: இது தேவையா?!..
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை திரைப்படமாக எடுத்து வருபவர் இயக்குனர் முத்தையா. குறிப்பாக இவரின் எல்லா படத்திலும் சாதி தூக்கலாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடித்தும், பெருமை பேசியும் படம் எடுக்கும் இயக்குனர் இவர். குட்டிப்புலி படம் மூலம் இயக்குனராக மாறினார்.
அதன்பின் அவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கொம்பன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்திற்குபின் மருது, கொடிவீரன், புலிக்குத்து பாண்டி என சில படங்களை இயக்கினார். மீண்டும் கார்த்தியை வைத்து விருமன் படத்தை எடுத்தார். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதன்பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க முத்தையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. சார்பேட்டா பரம்பரை படத்தில் சிறப்பாக நடித்த ஆர்யாவை ஹீரோவாக போடலாம் என நினைத்த கமல் முத்தையா - ஆர்யா கூட்டணியை உருவாக்கினார். ஆனால், ஆர்யா ரூ.15 கோடி சம்பளம் கேட்டார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதை ஏற்கவில்லை. எனவே, முத்தையாவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பிரித்து வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து அதே கதையை எடுக்க ஆர்யா திட்டமிட்டார். ஆர்யாவுக்கு ரூ.14 கோடி சம்பளம் கோடி கொடுக்கப்பட்டது. முத்தையாவுக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டது. அப்படி உருவான திரைப்படம்தான் காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்.
சமீபத்தில் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. தியேட்டரில் ரசிகர்கள் இல்லாமல் காத்து வாங்கி வருகிறது. இதுவரை மொத்தமாக ரூ.4 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளது. எனவே, இப்படம் படுதோல்வியடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது.
நல்லவேளை இப்படத்திலிருந்து கமல் எஸ்கேப் ஆனார் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.