டபுள் மீனிங் வசனத்தால் வாய்ப்பை இழந்த விஜய்… சரியான நேரத்தில் காப்பாற்றிய இயக்குனர்?

ஒரு காலத்தில் மக்களால் பெரிதாக ஏற்றுக்கொள்ள முடியாத நடிகராக இருந்தாலும், இப்போது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.
விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் நிறைய கஷ்டப்பட்டார். அவரது அப்பா இயக்குனர் என்றபோதும் விஜய்க்கு ஹீரோ என்கிற அந்தஸ்து அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. முதலில் சிறுவர் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் நாளைய தீர்ப்பு.
இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்காததால் அப்போது டாப் ஹீரோவாக இருந்த விஜயகாந்தோடு விஜய்யை நடிக்க வைத்து அவரை அடையாளப்படுத்தலாம் என முடிவெடுத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். அதன்படி உருவான திரைப்படம்தான் செந்தூர பாண்டி.
அதற்கு பிறகு ரசிகன்,விஷ்ணு போன்ற பல படங்களில் நடித்தாலும் அதிகப்பட்சம் அதில் ப்ளே பாய் மாதிரியான கதாபாத்திரத்திலேயே விஜய் நடித்தார். அவரது திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்சிகள் இருந்தன. டபுள் மீனிங் வசனங்கள் இருந்தன. இவையெல்லாம் குடும்ப ஆடியன்ஸை முகம் சுளிக்க வைத்தன.
இதனால் தொடர்ந்து குடும்ப ஆடியன்ஸிடம் விஜய்க்கு ஒரு அங்கீகாரமே கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் விஜய்க்கு உதவினார் இயக்குனர் விக்ரமன். கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பிறகு அப்போது வெற்றி இயக்குனராக இருந்த விக்ரமன், விஜய்யை வைத்து பூவே உனக்காக திரைப்படத்தை இயக்கினார்.
அந்த ஒரு படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் விஜய்யின் செல்வாக்கை அதிகரித்தது. அதனை தொடர்ந்துதான் விஜய் ஒரு காதல் நாயகனாக உருவெடுத்தார்.