ஒரே வார்த்தையில் தியாகராஜனை சம்மதிக்க வைத்த இயக்குனர்... பிரசாந்த் ஹீரோவானது இப்படித்தான்..!
பிரசாந்த் முதல் படத்திலேயே கதாநாயகனுக்கு உரிய எல்லா தகுதிகளோடும் தான் வந்தார் என்கிறார் இயக்குனர் ராதாபாரதி. இதுபற்றி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தியாகராஜன் சாருக்கு இவ்ளோ பெரிய மகனா என முதல்ல ஆச்சரியமா இருந்தது. ஆனா அவன் டாக்டருக்குப் படிச்சிக்கிட்டு இருக்கான்னு சொன்னார். அவனைப் பார்த்ததும் அந்தப் பையன்தான் கதைக்கு தேவைன்னு முடிவு பண்ணிட்டேன். அவனது படிப்புக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. அன்பாலாயா கம்பெனி சொன்னா சொன்னபடி நடப்பாங்க. 18, 20 நாள்ல கால்ஷீட் கொடுத்தா போதும். படத்தை முடிச்சிடுவேன்னு சொன்னேன்.
நாள்களோட எண்ணிக்கையை சொன்னதுமே தியாகராஜன் சாருக்கு என் மேல நம்பிக்கை வந்துடுச்சு. இது யூத் சப்ஜெக்ட். பிரசாந்த்துக்கு ஏற்ற வேடம்னு முடிவு பண்ணிட்டாரு தியாகராஜன். உடனே சம்மதிச்சிட்டாரு. எனக்கு பிளஸ் பாயிண்ட் இருந்தது. டயலாக் சொல்லும்போது கேமரால நல்லா பயமில்லாமல் நடிக்கணும். டான்ஸ் தெரிஞ்சிருக்கணும். அவர் நடிகரோட பையன். கராத்தே, உடற்பயிற்சி, பைட் பண்றது, டான்ஸ்னு எல்லாத்துலயும் அவன் ஓகே வா இருந்தான். ஹீரோ இவர் தான்னு பிரபாகரன் சாரும் ஓகே பண்ணிட்டாங்க. அதே போல ஹீரோயின், கேமரா மேன் அமைஞ்சது எல்லாமே பிளஸ் பாயிண்ட் தான்.
டான்ஸ் மாஸ்டர் அவங்களுக்குத் தோதான நாலஞ்சு பசங்களை வச்சி டிரெய்னிங் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் என் படத்துல பசங்களா நடிக்கிறதுக்கு அவங்களையே தேர்ந்தெடுத்தேன். ஹீரோயினுக்கு நல்ல தமிழ் பெயரா வைக்கணும்னு காவேரின்னு வச்சிட்டாங்க.
நம்ம அப்பா தான் நம்மை சினிமாவிற்குத் தயார்படுத்துகிறார் என்ற மனநிலையிலேயே பிரசாந்த் நடிச்சிக்கிட்டு இருந்தார். அதே போல அவருடன் நடிக்கும் மற்ற பசங்களோட மனநிலைக்கும் உள்ள வேறுபாடு இருந்தது. அவருக்குப் பிடிச்ச கதைங்கறதால பிரசாந்தும் முழு ஈடுபாட்டோட படத்தில் நடிச்சார். புது நடிகர் மாதிரியே இல்ல. அதுக்கு இன்னொரு காரணம் டான்ஸ் மாஸ்டர் பசங்களும் ஜாலி மூடுல நடிச்சாங்க. அது கதையோட மிங்கிளாயிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... முருங்கைக்காயால ஒண்ணும் செட்டாகலயா? எப்படி சொல்லலாம்? பாக்கியராஜை சீண்டும் நாட்டாமை!..
1990ல் ராதாபாரதி பிரசாந்தை ஹீரோவாக வைத்து எடுத்த படம் வைகாசி பொறந்தாச்சு. அன்பாலாயா பிலிம்ஸ் தயாரித்தது. தேவாவின் இசையில் படத்தில் அத்தனை பாடல்களும் மாஸ் ரகங்கள். யூத் சப்ஜெக்ட் என்பதால் கல்லூரி இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.