இந்த பாட்டு வேண்டாம்... விக்ரம் படத்தில் இயக்குனர் நிராகரித்த பாடல்!.. எந்த பாட்டுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சில இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யா சாகர். அவரது தனிப்பட்ட இசையின் மூலம் சினிமாவில் பல வருடங்கள் இசை ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்தார்.
பல இயக்குனர்களோடு காம்போவாக வித்யாசாகரின் இசை ஹிட் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானவர் இயக்குனர் தரணி. தமிழில் உள்ள புகழ்பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் தரணி. தரணி இயக்கிய பல படங்கள் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அவற்றில் கில்லி முக்கியமான திரைப்படம்.
இயக்குனர்களுக்கு பிடித்தாற்போல இசையை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் வித்யா சாகர். இசையில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அப்படியாக தில் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு வித்யாசாகருக்கு வந்தது. தில் படத்தின் பாடல்களை இப்போதைய தலைமுறையினர் வரை பலரும் கேட்டுருப்போம்.
இயக்குனர் நிராகரித்த பாடல்:
இயக்குனர் தரணியை பொறுத்தவரை அவருக்கு திரைப்பட பாடல்கள் என்றாலே மிகவும் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். ஸ்லோவாக போகும் பாடல்கள் அவருக்கு பிடிக்காது. அதே போல 5 நிமிடத்திற்கு குறைவாக பாடல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தில் திரைப்படத்திற்கு இசையமைத்து கொடுத்தார் வித்யாசாகர். ஆனால் அதில் வரும் உன் சமையல் அறையில் என்கிற பாடல் இயக்குனருக்கு பிடிக்கவில்லை. சார் இந்த பாட்டு மட்டும் வேண்டாமே என கூறியுள்ளார் தரணி. ஆனால் இந்த பாட்டை படத்தில் வையுங்கள் என வற்புறுத்தியுள்ளார் வித்யாசாகர்.
ஆனால் படம் வெளியானப்பிறகு மற்ற பாடல்களை விடவும் உன் சமையல் அறையில் பாடல்தான் பெரும் ஹிட் கொடுத்தது.
இதையும் படிங்க: ரஜினியின் கடைசி படம் இதுதானா?.. லோகேஷ் கனகராஜை பாராட்டி இயக்குனர் மிஷ்கின் போட்ட குண்டு!