இளையராஜாவையே வேணாம்னு சொன்ன இயக்குனர்... எதுக்குன்னா அதுலதான் இருக்கு டுவிஸ்ட்!
இயக்குனர் வசந்திடம் உதவியாளராக இருந்தவர் மு.களஞ்சியம். முரளி நடித்த பூமணி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இவர் இசைஞானி இளையராஜாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
எனக்குப் பட வாய்ப்பைக் கொடுத்தவர் ஜி.விவேகாநந்தன். ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போட்டார். 'படத்திற்கு இசை இளையராஜாவாகத் தான் இருக்கணும். மற்ற கலைஞர்களை உன் விருப்பம் போல தேர்ந்தெடுத்துக் கொள்' என்றார்.
எனக்கு அதுல உடன்பாடு இல்லை. பெரிய தயக்கம் இருந்தது. அப்போ வசந்த் சாரிடம் வேலை பார்த்தேன். அவர் கம்போசிங்கிற்காக இளையராஜாவிடம் போவார். என்னை வெளியே நிற்கச் சொல்வார். நான் சுவர் வழியா ஜன்னலை எட்டிப்பார்த்தால் உள்ளே பெரிய பெரிய ஜாம்பவான்கள் நிற்பாங்க. கமல், சங்கிலி முருகன், கங்கை அமரன் இவங்க எல்லாரும் நிற்பாங்க.
அது எனக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்கி விட்டது. அதனால முதல் படத்துக்கு பிரச்சனை இல்லாத ஆளா இருக்குற தேவா கூட ஒர்க் பண்ணலாம்னு பார்த்தேன். ஆனா படம் இயக்கணும்னு சொன்னா அது ராஜா சார் இசையா இருந்தால் தான் தருவாங்கங்கற நிலைமை வந்தது.
உடனே முரளி சாரை கதாநாயகனாக போட்டேன். 'யாரு இசை அமைப்பாளர்?'னு கேட்டாரு. உடனே நான் பேசி இளையராஜாவை அறிமுகப்படுத்துறேன்னாரு. அதுக்கு அப்புறம் அவருடன் இணைநது 4 படங்கள் இயக்கினேன். நான் வெற்றியாளனாக மாற எனக்காக கடுமையாக உழைத்தவர் இளையராஜா.
பூமணி படம் வெளியாகும் முன்னே பாடல்கள் ஹிட். அதனால எனக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.விவேகானந்தனும், வெற்றியைக் கொடுத்த இளையராஜாவும் தான் எனக்கு கடவுள் மாதிரி.
உங்களை வேணாம்னு டைரக்டர் சொன்னாரு.. அப்படின்னு இளையராஜாவிடம் சொல்லுங்கன்னு முரளிக்கிட்ட சொன்னேன். அவரு தயங்கினாரு. இல்ல நீங்க சொல்லுங்க. அதுக்கு நான் என்ன பதில் சொல்றேன்னு பாருங்கன்னு சொன்னேன். அவரு, நான், தயாரிப்பாளர், டைரக்டர் நாலு பேரு தான் இருக்கோம். முரளி தயங்கி தயங்கி சொன்னாரு.
அப்போ இளையராஜா என்னைப் பார்த்து 'நீங்க ஏன் என்னை வேண்டாம்னு சொன்னீங்க?'ன்னு கேட்டார். உடனே நான் எழுந்து நின்னு, 'இப்ப கூட நான் உள்ளுக்குள்ள பயந்துக்கிட்டு தான் இருக்குறேன். உங்களோட சாதனைகள், பாடல்கள், நீங்க வேலை செய்த ஆட்கள் இதை எல்லாத்தையும் பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்கு சார்'னு சொன்னேன்.
இதையும் படிங்க... இவன் டைரக்டரா? இல்ல பொறுக்கியா? அந்த பிரபலத்தை பார்த்து கோபப்பட்ட சிவாஜி..
அதற்கு இளையராஜா, 'தம்பி உட்காருப்பான்னு சொன்னாரு. எனக்கு என்ன மகிழ்ச்சின்னா நான் அடுத்த தலைமுறையோடு வேலை செய்யப்போறேன். இதுக்கு நீ தான் கேப்டன். உனக்குக் கீழே தான் நான் வேலை செய்யப்போறேன். உனக்கு என்ன வேணுமோ தாராளமா கேளு. அதை நான் செஞ்சித் தாரேன்'னு சொன்னார் இளையராஜா.