என்னதான் இருந்தாலும் அந்த குற்ற உணர்வு இருக்கும்ல? நடிகரிடம் வருத்தப்பட்டு பேசிய SK

Published on: January 13, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட இந்த அயலான் திரைப்படம் நேற்றுதான் ரிலீஸாகியிருக்கிறது.

ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சயின்ஸ்  ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் அறிவு சார்ந்த படமாக இந்த அயலான் திரைப்படம் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: இவன்தான்டா அந்த ஹீரோ அடிங்கடா!.. விஜயகாந்தை துரத்திய ரசிகர்கள்!.. மகன் சொன்ன ஷாக்கிங் நியூஸ்..

ஆரம்பத்தில் இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகத்திலேயே இருந்து ஒரு வழியாக பொங்கல் ரிலீஸாக நேற்று வெளியானது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அயலான் திரைப்படத்தில் ஏலியனுக்கு டூப் போட்டு நடித்த நடிகர் வெங்கட் அயலான் திரைப்படத்தில் நடித்ததைப் பற்றியும் தன் அனுபவத்தையும் கூறியிருக்கிறார். படமுழுக்க சிவகார்த்திகேயனுடன் ஏலியனாக பயணித்தவர் வெங்கட்.

இதையும் படிங்க:மூன்று நடிகர்களின் முகத்தில் கரியை பூசிய 2023!.. இமேஜ் டேமேஜ் ஆன எஸ்.கே..

இவர் நடிப்பதற்கு முன் விஜய் டிவியில் வேலை பார்த்து வந்தாராம். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த அயலான் திரைப்படத்தின் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் வெங்கட்டை அணுகிய போதே ‘ நீங்கள் ஏலியனுக்கு டூப்பாகத்தான் நடிக்க இருக்கிறீர்கள். அதனால் உங்க முகம் திரையில் தெரியாது’ என்று சொல்லியேதான் கேட்டிருக்கிறார்கள்.

alien
alien

இருந்தாலும் முதன் முறையாக கேமிரா முன்பு நிற்க போகிறோம் என்ற ஆர்வத்தில் நடிக்க வந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கூட வெங்கட்டிடம் ‘உங்க முகம் வெளியே தெரியவில்லையே. அதை பார்க்கும் போது எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது’ என கூறி டான் படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என சிவகார்த்திகேயன் கூறினாராம். ஆனால் அதற்குள் வேறொரு படத்தில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு வெங்கட்டிற்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்யாணம் ஆனதே நம்பல! அதுல இவ்ளோ பெரிய மகளா? வைரலாகும் விஜே ரக்‌ஷனின் மகள் புகைப்படம்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.