அஜித்தை வைத்து அட்லி இயக்கும் திரைப்படம்…?? நிஜமாவே இது உண்மைதானா??

AK 63
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் “ஏகே 62” திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. ஆனால் “ஏகே 62” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதில்லை எனவும் விஷ்ணு வர்தன்தான் இயக்கவுள்ளதாகவும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு தகவல் வெளிவந்தது.

Atlee
இந்த நிலையில் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் “ஏகே 63” திரைப்படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், அத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வந்தது. இதனை தொடர்ந்து இந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பது குறித்தான தகவல் ஒன்றை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Ajith Kumar
அதாவது அட்லி “ஏகே 63” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் பரவும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார் பிஸ்மி. தனக்கு தெரிந்த சினிமா வட்டாரங்களில் விசாரித்த வரையில் இப்படி ஒரு புராஜெக்ட்டே இல்லை என தெரியவந்ததாகவும் பிஸ்மி அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “தகடு தகடு”… செம ஃபேமஸ் ஆன சத்யராஜ் வசனம் உருவானது எப்படி தெரியுமா??

Vijay, Atlee, Shah Rukh Khan
அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவரவுள்ளது. “ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து அட்லி விஜய்யை வைத்து “தளபதி 68” திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.