நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!...

by Rohini |
vijaykodi 1
X

vijaykodi 1

Vijay: இன்று விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சிவப்பு மஞ்சள் நிறத்தில் அதன் இடையில் வாகை மலரும் போர் யானைகளும் இடம் பெற அந்த கொடி அவருடைய அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. சரியாக 9:00 மணியிலிருந்து 10.00 மணிக்குள்ளாக கொடியை ஏற்றி இருக்கிறார் விஜய்.

அதோடு கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல ஜோதிடர் பாலகிருஷ்ணன் ரெட்டி அவர் கொடி ஏற்றிய நேரம் சரியில்லை என கூறியது பெரும் வைரலாகி வருகின்றது. 9 மணியிலிருந்து 10.00 மணி என்று சொன்னதும் இந்த ஜோதிடர் எப்படியும் பத்து மணிக்கு மேலாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க::இந்தியாவுல அவன் ஒருத்தன்தான்!.. சூரியை விட்டு விஜய் சேதுபதி பக்கம் போன மிஷ்கின்…

ஆனால் அவர்கள் சொன்னதைப் போல 10.00மணிக்கு உள்ளாகவே கொடியேற்றி இருக்கிறார்கள். ஆனால் அது குளிகை நேரம். எமகண்டம், ராகு போன்ற நேரத்திற்கு எப்படிப்பட்ட பலன் இருக்கிறதோ அதைப்போலத்தான் குளிகை நேரத்திற்கும் பலன் இருக்கிறது. எப்படி இந்த நேரத்தை தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை என அந்த ஜோதிடர் கூறியிருக்கிறார்.

மேலும் கொடி என்று பார்க்கும் பொழுது அதில் இருக்கிற சின்னமும் நிறமும் மிகப்பெரிய புகழையும் பெயரையும் பெற்று தரும். இன்றைய நாளை பார்க்கும் பொழுது வியாழக்கிழமை குருவோரம். சங்கடஹரா சதுர்த்தி. சங்கடகர சதுர்த்தி மாலையில் இருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறதாம். காலையில் குளிகை நேரம்.

இதையும் படிங்க::மாஸ்ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்திற்கே ஐடியா கொடுத்த பாடகி சித்ரா… கமல் ஐயா ரெடியா?

அந்த நேரத்தில் தான் கொடியை ஏற்றி இருக்கிறார்கள். குருவோட நாளாக இன்று இருப்பதனால் குருவுக்கு உகந்த நிறமாக மஞ்சள் நிறம் இருப்பதனாலையும் செவ்வாய்க்கு உகந்த நிறமான சிவப்பு நிறம் இருப்பதனாலையும் இந்த கொடிக்கு மிகவும் விசேஷம்.

ஆனால் யானை தனது கால்களை தூக்கி நிற்பது போல இருப்பது நிலையான வளர்ச்சியை தருமா என்பது சந்தேகம்தான். கொடியை பயன்படுத்தும் போது பொதுவாக சிரச்சின்னங்களை பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஜோசியர் கூறியிருக்கிறார். அதனால் தான் பெயர் வைக்கும் பொழுது கூட மலர்கள் பெயரோ நதிகளின் பெயரோ வைக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க::ஒன்னு இல்ல இரண்டு… அஜித்தின் அடுத்த ப்ளான் இதான்… ஆனா இவ்வளோ ஸ்பீடா?

அதுவும் போக இன்று ஜென்ம நட்சத்திரம் ஆன பூச நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சந்திராஷ்டமம் .அதனால் சந்திராஷ்டம தினத்தில் புதிய வேலைகள் தொடங்குவது என்பது அவ்வளவு நல்லது இல்லை என அந்த ஜோசியர் கூறியிருக்கிறார்.

Next Story