விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் சுடசுட அப்டேட்… இன்னுமா முடியலை…

Published on: November 22, 2024
vidamuyarchi
---Advertisement---

Vidamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியே இரண்டு வருடம் நெருங்கிவிட்ட நிலையில் இன்னமும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

அஜித்குமார்  துணிவு படத்தை முடிந்த கையோடு விக்னேஷ் சிவனின் படத்தில் ஒப்பந்தமாக இருந்ததாக அறிவிப்புகள் கசிந்தது. ஆனால் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்காத காரணத்தால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து மகிழ் திருமேனியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தனர்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக சத்யராஜ் சொன்ன கதை இந்தப் படம்தானா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே

லைகா நிறுவனத்தின் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைனாலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அஜித் பைக் பயணம் மேற்கொண்டதால் அப்போதும் ஆறு மாதம் தள்ளிப்போனது. கடந்த வருடம் அக்டோபரில் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆனால் அஜர்பைனாலின் கால சூழ்நிலையால் தொடர்ச்சியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பிப்ரவரிக்குள் அஜித்தின் கால்ஷூட்டும் முடிந்தது. மீண்டும் அவரிடம் பேசி இருந்தது தயாரிப்பு குழு. ஒரே நேரத்தில் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் என படத்தின் ரிலீஸ் மாதம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒருவழியாக அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது குட் பேட் அக்லி அந்த இடத்தை பிடித்து இருக்கிறது. இதனால் அஜித்தின் விடாமுயற்சி மே மாதம் ரிலீஸாகும் என தகவல்கள் கசிந்தது.

இதையும் படிங்க: விஜயாவை சிக்க வைத்த முத்து… கோபியுடன் பாக்கியாவின் சண்டை… தங்கமயிலின் பயம்!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.