முதன் முதலில் ஒரு படத்திற்கு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹீரோ - ஹீரோயின்!.. நடந்தது இதுதான்!..
Manonmani Movie: சினிமா என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா என அனைத்து மொழி சினிமாக்களும் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வந்தன. ஆனால் இப்பொழுது அந்தந்த மாநில திரையுலகம் தங்களுக்கென்று ஒரு விதிமுறையை வைத்து இயங்கி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இப்பொழுதுதான் தமிழ் சூப்பர் ஸ்டார், கன்னட சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டார் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரே ஒரு நடிகர்தான் அனைத்து மொழி சினிமாவுக்கு நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்துவருவாராம்.
இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..
இன்றைய சூழலில் ஒரு நடிகர்தான் தான் நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர் இவர், இயக்குனர் இவர் என தேர்வு செய்யும் சூழல் நிலவுகின்றது. இதே 80களின் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்தான் இயக்குனரையும் நடிகர் , நடிகையையும் தேர்வு செய்வார்.
இப்பொழுது பல முன்னனி நடிகர்கள் தன் பட இயக்குனரை தேர்வு செய்து அந்த தயாரிப்பாளரை போய் பாரு என அனுப்பி விடுகின்றனர். இந்த நிலையில் ஒரு படத்திற்கான ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்யும் பொறுப்பை ரசிகர்களிடமே ஒப்படைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தலைவர் 171, 172 மட்டுமில்லை!.. தலைவர் 173 படத்துக்கும் இயக்குநரை லாக் பண்ண ரஜினிகாந்த்?..
அந்தப் படம் தான் ‘மனோன்மணி’. டி.ஆர்.ராஜகுமாரியும் பியு சின்னப்பாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்த படமாக மனோன்மணி அமைந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான சுந்தரம் இந்தப் படத்திற்கான ஹீரோ ஹீரோயினை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மக்களிடம் விடுவதாகவும் அதற்கான விளம்பரத்தை பெருமளவு செய்யவும் சொல்லியிருக்கிறார். அதே போல் மக்கள் பெருவாரியாக சொன்னது ராஜகுமாரி மற்றும் சின்னப்பாவைதான்.அதன் பிறகே இருவரும் இந்தப் படத்தில் நடித்தார்களாம்.
இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..