இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதுன்னு சொன்னதே இந்த கமல் பட நடிகர்தான்… இவருக்கு இப்படி ஒரு பெருமை இருக்கா?
1994 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சுகன்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மகாநதி”. இத்திரைப்படம் இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் பஞ்சாபிகேசன் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்.
பூர்ணம் விஸ்வநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர். இவர் 1921 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 18 ஆவது வயதிலேயே பல மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் பூர்ணம் விஸ்வநாதன். இதனை தொடர்ந்து “உயர்ந்த மனிதன்”, “விளையாட்டுப் பிள்ளை” ஆகிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் கடைசியாக நடித்த படம் விஜய்யின் “தமிழன்”. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னையில் உயிரிழந்தார்.
பூர்ணம் விஸ்வநாதன் தொடக்கத்தில் ஆல் இந்தியா ரேடியோ வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இந்த நிலையில் யாருக்கும் இல்லாத ஒரு பெருமை இவருக்கு உண்டு. அதாவது இவர் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை முதன்முதலில் இந்திய மக்களுக்கு வானொலியின் மூலம் தெரிவித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக மட்டுமல்லாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை முதன்முதலில் மக்களுக்கு தெரிவித்த பெருமைக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கிறார் இவர்.
இதையும் படிங்க: உன் வேலைய மட்டும் பாரு… ஒளிப்பதிவாளரை கண்டபடி திட்டிய மனோபாலா… என்ன நடந்தது தெரியுமா?